Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Tuesday, August 19, 2014

ஓஷோவின் பார்வையில் - நட்பு- கவனித்தல்


1.நட்புணர்வு
நட்புணர்வு என்பது யாரைக் குறித்துமான, யாரை நோக்கியுமான அன்பு அல்ல. அது பேச்சாலோ அல்லது வேறு விதத்திலோ செய்துகொண்ட எந்த ஒப்பந்தமும் அல்ல. அது ஒருதனிநபருக்கும் மற்றொரு தனிநபருக்கும் இடையே ஆனதல்ல. மாறாக அது ஒரு தனிநபருக்கும் முழு இயற்கைக்குமானது. மேலும் அதில் மரங்களும் விலங்குகளும் நதிகளும் மலைகளும் விண்மீன்களும் அடங்கும். எல்லாமே நட்புணர்வுக்குள் அடங்கி விடுகிறது.உனது மௌனம் வளர்வதைப் போலவே உனது நட்புணர்வும் வளரும், உனது அன்பும் நேசமும் பிரியமும் வளரும்.பொறாமை மறையும்போது அங்கு ஆழமான நட்புணர்வு மலரும்.வாழ்வு ஒரு கண்ணாடி, அதனுடன் நட்புணர்வு கொள்வாழ்வு அனைத்தும் நட்புணர்வையே பிரதிபலிக்கும்.நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.மனதுடன் நட்பு கொள், அதை ஆழ்ந்த நட்புணர்வுடன் கவனி.நட்புணர்வு எதையும் எதிர்பார்ப்பதில்லை, அது எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை.
2.கவனித்தல்  [கவனம்]
உன்னுடைய எண்ணங்களுக்கு சக்தி கொடுக்காதே, ஒரு கவனிப்பவனாக மட்டுமே, ஒரு சாட்சியாக மட்டுமே இருதொடர்பற்றவனாக, தொலைவில் இருப்பவனாக, வேறுபட்டவனாக இரு. எண்ணங்களை வெறுமனே பார்! அதனுடன் எந்த வகையிலும் ஈடுபாடு கொள்ளாதே, அதனுடன் இணைந்தோ அதற்கு எதிராகவோ இருக்காதே! ஒரு கவனிப்பவனாக மட்டுமே இரு! மன ஓட்டம் நிகழட்டும், ஓரத்தில் நின்று அதை வேடிக்கை பார்! அதனுடன் நீ எந்த தொடர்பும் கொள்ளாமல், அதனால் எந்த பாதிப்பும் அடையாமல், தள்ளி நின்று பார்.எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து என்ன நிகழ்ந்தாலும் கவனி.உன் உள்ளத்தில் என்ன உணர்வுகள் வந்தாலும் ஒரு கவனிப்பவனாக மட்டுமே இருந்து கவனி.ஆன்மீகத்தின் எளிய ரகசியமே இதுதான், ஒரு சாட்சியாக இரு!மனதை விட்டுவிடு, கவனிப்பவனில் மேலும் மேலும் மையம் கொள்.கவனிப்பவனில் நீ மையம் கொண்டிருந்தால் நடப்பவை யாவும் கடந்து செல்பவை மட்டுமே.முழுமையான சாட்சிபாவம் பெற, முழுமையான கவனிப்பவனாக மாற சிறிதுகாலம் பிடிக்கும், பொறுத்திரு.
3.வாழ்க்கை
வாழ்வை பருகுபவனாக, இயற்கையின் சாற்றை பருகுபவனாக, குடிகாரனைப் போல இரு. தூங்குமூஞ்சியாக இருக்காதே, ஒரு தூங்குமுஞ்சி இறந்தவனே! வாழ்வின் ரசத்தை பருகு, அது கவிதை ரசமும் அன்பு மயமும் அளவுகடந்த சாறும் கொண்டது. நீ எந்த வினாடியும் வசந்தத்தை கொண்டு வரமுடியும். வசந்தத்துக்கு ஒரு அழைப்பு விடு! சூரியனும் காற்றும் மழையும் உன்னுள் நுழைய அனுமதி.வாழ்க்கை ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டதல்ல, அதிலும் குறிப்பாக மனித இனத்துக்கு அறவே கிடையாது.நீ எதைச் செய்தாலும் வாழ்க்கை அதுவாகவேதான் இருக்கும் என்பதை புரிந்து கொள்.வாழ்க்கை தனிப்பட்ட அர்த்தம் எதுவும் கொண்டதல்ல, ஆடு, பாடு, அனுபவி, ஆனந்தப்படு, கொண்டாடு!வாழ்க்கைக்கு எல்லைகளோ, வரையறைகளோ கிடையாது, அது எப்போதும் எல்லாவற்றையும் கடந்து செல்லும்.வாழ்க்கை ஒரு நம்பிக்கையல்ல, அது உண்மைக்கான ஆழமான தேடல்.வாழ்க்கை ஒரு சாகச பயணம், வாழ்க்கை ஒரு தொடர்ந்த தேடல்தான்!

ஒருமையில் அமர்ந்திரு- ஓஷோ


ஒருமையில் அமர்ந்திரு
இதை முயற்சி செய்து பார், உணர்ந்து பார். ஒருமையில் சிறிது நேரம் அமர்ந்து பார். ஒருமையில் வெறுமனே எதையும் செய்யாமல் அமர்ந்திருப்பது இதுதான் தியானம் எனப்படுவது. நீ தனிமையை உணர்ந்தால் அப்போது உன் இருப்பில் உள்ள ஏதோ ஒன்றை நீ இன்னும் உணரவில்லை என்றுதான் பொருள். நீ யார் என்று இன்னும் நீ தெரிந்து கொள்ளவில்லை. அப்போது அந்த தனிமையில் ஆழ்ந்து போ. அப்போது திடீரென அந்த தனிமையே ஒருமையாக நிலைமாறுதலடையும் ஒரு கட்டத்திற்கு நீ வருவாய். தனிமை என்பது ஒருமையின் எதிர்மறை பாகம். நீ அதனுள் ஆழ்ந்து போனால் நீ அதன் நேர்மறையான பாகத்தை உணரும் கட்டம் வந்தே தீரும். அது திடீரென வரும். ஏனெனில் அந்த இரண்டு பாகங்களும் எப்போதும் ஒன்றாகவேதான் இருக்கும்.  

Friday, August 15, 2014

அனுமாரின் வசியக் கட்டு

ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா
லங்காபுரி ராவண சம்ஹாரா,
 
சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா
அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு  ஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"


திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்

பகவதி மந்திரம்


பாரப்பா இன்னமொரு தீச்சைமார்க்கம்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
நேரப்பா பகவதியாள் தியானந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறே நிசமதாக
சாரப்பா தன்சார்பு நிலையில்நின்று
சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றேதான்
காரப்பா புருவ நடுக்கமலத்தேகி
கருணையுடணாயிரத்தெட்டுருவே செய்யே.

செய்யடா மானதமாயுருவே செய்யத்
திருயுருவாய் நின்றபகவதியாள்தானும்
மெய்யடா உனதிடமாய் நிருத்தஞ்செய்வாள்
பண்ணப்பா இதுசமயமென்று நீயும்
பகவதியாள் விபூதியை நீதரித்துக்கொள்ளே.

கொள்ளடா விபூதியை நீதரித்துக்கொண்டு
குணமாகப் பகவதியைத்தியானம் பண்ணி
நில்லடா உன்முகங்கண்டோருக்கெல்லாம்
நீங்காத பாவமெல்லாம் நீங்கிப்போகும்
சொல்லடா உன்வசனம் நன்மையாகும்
சோதிதிருப்பகவதியாள் சுருக்கினாலே
அல்லடா உன்மனதை நோகப்பண்ணும்
அவர்கள்குடி செந்தீயிலழுந்துப்பாரே.              -அகத்தியர் பரிபூரணம்
1200
பொருள்:
பகவதியின் தியானத்தை சொல்கிறேன் கேள், மனஓர்நிலையோடு புருவமையத்தில் மனதை குவித்து 'ஓம் ரீங் அங்" என்று 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.இம்மந்திரதை சித்தி செய்தவரின் உள்ளத்தில் பகவதி இருந்து இவர்கள் செய்யும்  சகல காரியங்களும் இவர்களுக்கு சித்தியாகும்படிசெய்வாள். விபூதியை பூசிகொண்டு இம்மந்திரத்தை தியானம் பண்ணி   செல்ல உன் முகம் பார்க்கும் யாவரின் பாவங்களும் விலகிவிடும்.  நீ சொல்வதெல்லாம் பலிக்கும். உனது சகலபாவங்களும் விலகிவிடும்.  உன் மனதை எவனாவது நோகடித்தால் அவன் குடும்பம் அழிந்துபோய்விடும் என்கிறார் அகத்தியர். மேலும் அகத்தியர் தனது வாதசௌமியம் என்னும் நூலிலும்  இம்மந்திரத்தை பற்றி சொல்லிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்மந்திரத்தினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை. சகலமும் சித்தியாகும்.செல்வம் பொழியும். எடுத்த காரியமெல்லாம் ஜெயமாகும். நினைத்தபடி முடியும். ஆபத்து வராது, வல்வினைகள் அகன்றுவிடும். இம்மந்திரம் கோடானகோடி பூசைசெய்ததற்கு  ஒப்பாகும் என்று  வாதசௌமியத்தில் கூறியுள்ளார் அகத்தியர்.

அம்பிகாதேவி மந்திரம்


அம்பிகாதேவி மந்திரம்
தேவியென்ற அம்பிகா தேவிதனை
செம்மையுடன் கண்டுபதம் சேவை செய்ய
ஆவிஎன்ற மந்திரமஞ் சூச்சந்தன்னை
அருள்பெருகும் புலத்தியனே சொல்லகேளு
தாவிமனங்கொண்டுகே சரத்தில் நின்று
தன்மையுடன் அங் உங் நங் கலிஒமென்றே தான்
கூவி மசையாமல் மௌனமாக
கூர்மைஉடன் அந்திசந்தி உருநூற்செய்யே.----434
  
செய்யாட உருவறிந்து உருவேசெய்யே
திருவுருவாய் நின்றஒரு மூலம்மிதில்
மெய்யடா அக்கினி கொண் டுயரயேறி
வேதாந்த பூரணத்தில் தீபம்காணும்
மய்யடா மையமதில் தீபம்கண்டால்
மகத்தான அம்பிகா தேவிருபம்
அய்யனே நன்றாய்சொல்லகேளு
ஆலாத்தி கற்பூரதீபம்தானே.------435

தானென்ற தீபமதில் மனதை நாட்டி
தன்மையுடன் வீபுதியைநீ கையில் வாங்கி
கோனென்ற குருபரனை தியானம் பண்ணி
குவலையத்து மானிடர்க்கு கடாட்த்தாக்கால்
ஊனென்ற தேகமதில் நின்ற நோய்கள்
உத்தமனே அப்போதே விலகிபோகும்
வினென்ற பில்லிமுதல் எல்லாம்
விட்டகன்று போகுமடா மெய்தான்பாரே.------436
(அகத்தியர் பரிபூரணம் 1200)

அகத்தியர் வாதசௌவ்மியம் 1200நித்தமும்நீ தினம்தோறும் தியானம் பண்ணி
நேர்மையுடன் அந்திசந்தி பூசை செய்தால்
சுத்தமுடன்சொல்லுகிறேன் புலத்தியனேகேள்
சோதியென்ற ஆதார மூலம்பார்த்து
பத்திஉடன் அங்கிலி ஓமென்றுநீயும்
பதிலாக மனதாக உருவே செய்தால்
சித்திஉள்ள கணபதியும் வல்லபையும் மைந்தா
சிந்தைதனில் ஓளிவிளக்காய் தரிசிப்பாய்

தரிசிப்பாய் தினம்தோறும் தியானம்பண்ணி
தீர்க்கமுடன் மானதமாய் பூசைசெய்தால்
நெறிசித்தியாகி அந்த நெறிக்குள்ளே
நின்றிலேங்கும் கணபதியும் வல்லபையும்மைந்தா
பரிசித்த மாகவேநீ தெரிசித்தாக்காற்
பத்தியுடன் சகலசித்தும் கைகுள்ளாகும்
வருவித்த சித்தாள்தான் கைக்குள்ளான
மகத்தான அவையடக்க் சொல்லகேளே
                                        (அகத்தியர் வாதசௌவ்மியம் 1200)

மந்திர தியானம்பாராளும் புலத்தியனே சகலருக்கும்
பதிவான மந்திரவாள் சூட்சங்கேளு
நேரான மூலமடா வடிவுமாச்சு
நேசமான ரீங்காரம் வேலுமாச்சு
கூறாத வடிவெல்லாம் மந்திரவாளை
கூர்மையுடன் சொல்லுகிறேன் ஓம்றிங்கென்று
மாறாத மவுனமாய் தியானம்பண்ண
மார்க்கம்முடன் திசையான வகையைபற்றே.

பத்திமனம் கொண்டு பூரணமாய் நின்று
பரஞான கேசரமே வாசமாகி
சுத்தமுடன் ஓம் றீங் வசிவசி என்றுஒதே
சூழ்ந்திருந்த சத்ருக்கள் வசியம் ஆகும்
சித்தமுடன் ஓம் றீங் நசிநசி என்றோத
சினந்துவரும் பீடைஎல்லாம் அகன்றுபோகும்
சுத்தமுடன் ஓம் றீங் வசிவசி என்றோத
சகல சவுபாக்கியம் தானுண்டாமே.

உண்டாகும் ஓம் றிங் மசி மசி என்றோத
ஒடுங்காதே காலகடி விஷங்கள்மீளும்
தண்டாமல் ஓம் றீங் அங் என்றோத
தட்டழிந்து மிருகம்எல்லாம் தானேஓடும்
நன்றாக சொன்னதிந்த மந்திரவாளை
நாட்டமுடன் பூரணமாய் பூசைபண்ணி
நின்றாட யாதொருகால் எழுத்துகெல்லாம்
நிசமான மந்திரவாள் ஓம் றீங்கேன்னே.

பாரப்பா இடதுகண் அகாராஞ்சந்திரன்
பதிவான வலதுகண் ஊகாரஞ்சூரியன்
நேரப்பா சுழிமுனைதான் மகராம் அக்கினி
நினைவாக இப்படியே தியானம்செய்து
கூரப்பா செபிக்கரதேவி மந்திரங்க்கேளு
கருணைஉடன் ஓம் றீங் சிவயவசிஎன்று
தேரப்பா இப்படியே தியானசெபம் பண்ண
சிவசிவா இகபரமும் முத்தியாச்சே. (அகத்தியர் வாதசௌவ்மியம் 1200)