Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Thursday, August 30, 2012

கருவூரார் வாதகாவியம்

அமுதரச கற்பத்தை நீயறிந்தின்ன தென்றறிந்து
சமுத்தாய் வழலையுடன் இவைரெண்டுந் தான்சேர்த்தெடுத்திடுவாய்
இரசவாத கற்பமத்தை விடாமல் நாட்டமுடன் கொண்டாக்கால்
நிசமாய் மலஜலங்கள் பட்டயிடம் நிதிவேதை காணுமப்பா
அட்டலோகம் பேதிக்கும் வெகு ஆச்சரியமயிருக்கும்
திட்டமாய்த் தான்பழுக்கும் இது சிவனானைதப்பாது
என்குருவு போகநாதர் முன்னம் இனிமையுடன் சொன்னதிது
தன்மையுடன் சொன்னேனப்பா இனித்தவராமற் செய்திடுவாய்
தாரணை விடாமற் செய்தால் பின்பு சர்வமும்தான் பொன்னாகும்
பாரினிலே வெளியாக உனக்கு பண்பாகத் திறந்துவிட்டேன்
கருவூரார் வாதகாவியம் 200-பக்கம்- 20
அமுதமாகிய கற்பத்தை நீ சரியாகத்தெரிந்து அது இன்னது தான் என்று கண்டு சமர்த்தாக உட்கொள்வாய். இந்த இரசவாத கற்பத்தை விடாமல் விருப்பமுடன் உட்கொண்டால் எட்டு வித உலோகங்களும் மாறுபடும். உனது மலசலங்கள் பட்ட இடம் மாறி ஆச்சரியம் திடமாய் தங்கமாகும். இது சிவன் மேல் ஆணை. எனவே தவராமாமல் செய்திடுவாய் தாரணை தொடர்ந்து பார்த்தால் பின்பு எல்லாமே பொன்தான் இதை நான் மனம் திறந்து வெளியில் சொல்லிவிட்டேன்.

அகத்திய பூரண சூத்திரம்

"அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு"
- அகத்தியர் -
சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் துவங்குகிறார் அகத்தியர்....
"ஓம் கிலீம் சிவாய நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும் அப்படி அவர்களை கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க வேண்டும் என்று கூறுகிறார்.

அகத்திய தரிசனம்

மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தானஅகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் .தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.

“அகத்திய வாத சௌமியம்”

ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே
ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி எனஎட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார்.
இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.
எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியை ப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.
இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர்அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.
இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள்எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.

குமரி கற்பம்

அற்புதமதாக வொரு மருந்து
அரைகிறேன் இன்னதென்று தெரிந்து கொள்ளும்
கற்பமொன்று விள்ளுகிறேன் நல்ல
கற்றாழஞ்சோறேடுத்து விஸ்தாரமாய்
திரிகடுகு பொடிபன்னி வெருகடி
தீர்க்கமுடன் கற்றாழஞ் சோற்றுடனே
பிராட்டியே தின்றுவரக் காயம்
பிலக்குமப்பா நரைதிரை மாறும்
நான் இன்னும் ஒரு மருந்தாகிய கற்பம் சொல்கிறேன். அதை இன்ன தென்று தெரிந்து கொள்ளு சுக்கு, மிளகு, திப்பிலி இது மூன்றும் கலந்த மருந்து திகடுகு என்று அழைக்கப்படும் இந்த திகடுகு பொடி செய்து அதில் வெருகடி அளவு ஏழு தடவை கழுவி சுத்தம் செய்த கற்றாழைச் சோற்றுடன் கலந்து சாப்பிட்டுவர உடல் பலப்படும் நரை திரை மாறும்.

காய கற்பம் உண்பவர்க்கான பத்திய முறைகள்...2

"உன்னியே பாலோடு நெய்யைக் கூட்டு
ஒருசேர சமைத்துண்டு ஒரு போதையா
பண்ணியே ராமாறு பாலைக்கொள்ளு
பணியாரம் சிறு பயறு பழமும் தேனாம்
குன்னியே கோரக்கர் கற்பமாகும்
போமென்ற புளிமேல் ஆசையானால்
புளியாரை புளியரணை சீக்காய்க்கொழுந்து
நேமென்ர நெல்லிக்காய் பசலைக் கீரை
நித்தியமாய்க் கூட்டியே கற்பமுண்ணு
ஆமென்ற பயரோடு யிளநீருங்கரும்பும்
ஆகாது குளிர்ந்த தண்ணீர் தானுங்காணே"
பால், நெய், சிறு பயறு வகை, பழங்கள், தேன் கற்பத்திற்கு உண்ணக் கூடியவை என்றும், புளி சேர்க்காமல் சாப்பிட முடியாதவருக்கு புளியாக் கீரை, பசலைக் கீரைகளை சேர்த்துக் கொள்ளலாம் என்றும், கரும்பும், இளநீரும் , குளிர் நீரும் சேர்க்கக் கூடாது என்றும் போகர் சொல்கிறார்.

காய கற்பம் உண்பவர்க்கான பத்திய முறைகள்...

"யோகமாம் புளியுப்பு எண்ணெய் சுண்ணம்
உரிசையா மாங்கிசங்கள் மச்சமாகா
மோகமா மோரோடு கடுகு உள்ளி
முதிரான காரமமொடு பெருங்காயந்தான்
போகமாய் பெண்ணுட புணர்ச்சியோடு
பேரான நித்திரையும் சோம்பல் தள்ளி
வாகமாம் வாசிதனை மறித்துக் கொண்டு
மறவாமல் இரவு பகல் மனது உன்னே"
புளி, உப்பு, எண்ணைவகை, மோர், கடுகு, உள்ளி, மது, மங்கை, மாமிசம் புசித்தல், அதிக காரமும், பெருங்காயமும், நேரம் தவறி உறங்குதல், சோம்பல்குணம், இரவு பகல் எந்நேரமும் காய கற்பம் உண்பதை நினைத்திருந்து இவற்றை கட்டாயம் நீங்க வேண்டும்.

Wednesday, August 29, 2012

நெல்லி கற்பம்

கருவூரார் தனது வாதகாவியம் என்னும் நூலில் கீழ்க்காய் நெல்லி கற்பம் பற்றி பின் வருமாறு விளக்குகிறார்.
பூசமுடன் குருவாரங் கூடும் நாளில்
புகழ் பெறவே கற்பமது கொள்வாயப்பா
வாசங்கீழ் காய் நெல்லிச்ச மூலந்தன்னை
வளம்பெறவே நிழல்தனிலே வுலர்த்திக் கொண்டு
நேசமுடன் சூரணமே செய்து பின்பு
நெய்தேனுஞ் சீனியுமொன் றாகக்கூட்டி
ஆசையுடன் தானருந்தக் காயசித்தி
யாகுமிது கற்பமுறை யிதுதான் சொன்னேன்.
சொன்னேன்நான் பத்தியங்கள் நெய்யும் பாலும்
சோறுமல்லல் மற்றொன்று மாகா தப்பா
மன்னனே அரைவருடங் கொண்டாயாகில்
மகாகுட்டம் பதினெட்டுந் தீர்த்தே போகும்
நன்னயமா யொருவருடங் கொண்டா யானால்
நல்லமதி புத்தியது மயங்கா தப்பா
என்றுபதி னாறான வயதுபோல
இருநூறு வயதுவரை வலுமை தானே.
கீழ்க்காய் நெல்லியின் மூலத்தை எடுத்து நிழலில் காயவைத்து சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். (மூலம் என்பது பச்சையாக பிடுங்கப் பட்ட வேர் ஆகும்.) பின்னர் அத்துடன் சர்க்கரையும், நெய்யும், தேனும் சம அளவில் சேர்த்து சுண்டைக்காய் அளவில் உருண்டகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம்
பூச நட்சதிரமும் வியாழக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் இந்த உருண்டையை உண்ணத் தொடங்க வேண்டுமாம். இப்படி இந்த உருண்டையை தொடர்ச்சியாக ஆறுமாதம் உண்டால் மகா குட்டங்கள் எனப்படும் பதினெட்டு வகை நோய்களும் தீரும்என்கிறார்.. இதையே தொடர்ந்து ஒருவருட காலம் உண்டுவந்தால் பதினாறு வயது போல் இளமையுடனும், மதி நுட்பத்துடனும் இருநூறு வருடங்கள் வலிமையுடன் வாழலாம் என்கிறார் கருவூரார்.
இந்த காய கற்பம் உண்ணும் நாட்களில் பத்தியமாக நெய்யும், பாலும், சோறும் தவிர வேறு எதனையும் உட்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.

கருவூரார் வேம்பு கற்பம்

தானவனாம் வேம்பினோட கற்பம்தன்னை
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளும்
ஆனதொரு கார்த்திகையாம் மாதம்தன்னில்
வால்மிருக சிரீஷமும் பூசம்தன்னில்
ஏனமுதற் ஜலமிக்கக் கொழுந்தைக்கிள்ளி
இன்பமுடன் தின்றுவா இருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டு போகுமப்பா அறிந்துகொள்ளேன்
கொள்ளப்ப மாதமொன்று கொண்டேயாகில்
குஷ்டமென்ற பதினெட்டு வகையுந்தீரும்
துள்ளுகின்ற பூதமொடு பிசாசுதானும்
துடிதுடித்து கண்டவுடன் ஓடிபோகும்
விள்ளுகின்றேன் பொடிசெய்து கொளுந்துதன்னை
வெருகடியாய்தேனில் அரைவருடம் கொண்டால்
வள்ளலே நரையொடு திரையுமாறும்
வாலிபம்முன்னூறு வயதிருப்பான் கானேன்
இருப்பதொரு வேம்பினை துளைத்துதானே
இன்பமுடன் மேல்நோக்கி சிலாகைத்தாக்கி
திருப்பாணி மாகுமப்பா மற்றொண்றாக
திதங்கீழ் மற்றதோர் பாண்டம்வைத்து
மறுப்பிலா துபாயமதனை மூடி
மண்டலம்தான் சென்றபின்பு தைலம்தானும்
விருப்பமுடன் தைலமங்கே இறங்கினிற்கும்
மீண்டும்நீ தைலமதை எடுத்துக்கொள்ளேன்
எடுத்துவந்த தைலமப்பா கலஞ்சிமூன்று
இந்தயிடை தேன்கூட்டி குழப்பிக்கொண்டு
திடமாக மண்டலமே கொண்டேயானால்
திரையுமில்லை நரையுமில்லை செப்பக்கேளு
அடவாக அதிசயங்கள் அநேகம்கானும்
ஆறுஆதாரங்கள் எல்லாம் வெளியாய்கானும்
இடமாக காரியங்கள் ஜெயம்கொள்வாய்நீ
இன்ப மனோகரனாய் இருப்பாயென்னே
என்னேகேள் வண்ணந் தானேயாவாய்
இயல்பாக அரைவருடம் கொண்டேயானால்
உன்னிலே பதினாறு வயதுபோல
உறுதியாய் வைரசடம் உமிழ்நீர்வேதை
மன்னனே யாகாச கெளனசித்தி
வல்லமையால் பூவுலகில் வசிக்கலாகும்
சொன்னபடி ஒருவருடம் கொண்டேயாகில்
தொலையாத காயசித்தி வேம்பிங்கற்பம்.

தூதுவளைக் கற்பம்

தூதுவளை
இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.
தூதுவே ளையையுணத் தொக்கினிற் றொக்கிய
வேதையா நொயெலா மெய்யைவிட் டகலுமே
(தேரையர் காண்டம்)
தூதுவளைக் கற்பம்
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில்கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.

திருமந்திரம்

சிவனுக்கு ஒப்பானவர் எவருமில்லை
சிவனோ டொக்கும் தெய்வம் தேடினுமில்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவருமில்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடி தாமரையானே.

Tuesday, August 28, 2012

சிவ மந்திரமும்-பலன்களும்

நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.
சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும். ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

திருமந்திரம்

நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமுந்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமஞ் சிவநட மாகுமே."
"நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானன்றே."
நாதத்தின் நாயகனை நாதத்தால்தான் கட்ட இயலும்."நமசிவய" என்னும் மூலமந்திரத்தைஓதவேண்டும்.
மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லுதல் தூலஜபம். ஒலி வெளிவராமலும் நாவசைந்து ஓதுதல் சூக்கும ஜபம். நாவசையாது, ஒலி வெளிவராது உள்ளுக்குள்ளே (உள்ளுக்கு உள்ளே) ஓதுதல்தான் உன்னத காரண நிலை.
நாதத்தின் தலைவன் நாதன். அப்படிப்பட்ட நாதனின் தாள் வாழ்க.இது பக்தி மார்க்கத்தில் உள்ளவருக்கு.
இதன் ஞான நிலை.

‎"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூலமந்திரம்.

‎"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம்.
சிவம் என்றால் மங்களம் என்று பொருள்.
...
யஜுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம். அதன் நடுநாயகமே"நமசிவய". தீக்கை பெற்றிருந்தாலும், பெறாவிடினும் "நமசிவய" என தாயைக் கூவியழைக்கும் சேய்போல் அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு. கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில் வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப்போல், சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களை எல்லாம் சிவமயமாக்குகிறார்.
பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின்தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்.

மனம்1

இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல. ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒருதவறும் இல்லை. இவை நம்மை வழிநடாத்த நாம் எருமை மாடுகள் போல் இயந்திரமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.
நமது பிரக்ஞையின் கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும். மனம் சிறந்த சேவையாற்றும் உறுப்பு நுட்ப வேலைதிறன் கொண்டது. ஆனால் மிக மோசமான முதலாளி. நம் அனைவரினதும்இன்றைய முதலாளி நம் மனமே. மனதை நாம் சரியான வழியில் பயன்படுத்த தவறிவிட்டோம். நம் பிரக்ஞையின்றி நம் மனதிலிருந்துதான்தோன்றித்தனமான எண்ணங்களும் சிந்தனைகளும் வெளிவருவதற்கு நாம் காரணமாகிவிட்டோம். இன்று இவற்றை இல்லாது செய்வது பெரும் பணியாக உள்ளது. நம் மனம் எப்பொழுது தான்தோன்றித்தனமாக சிந்தனைகளை வெளிவிடுவதை நிறுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றதோ அன்று நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்பதை உத்தரவாதப்படுத்தலாம். நம் மனதை முதலாளி பதிவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால்
நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் இல்லாமல் போய்விடும் என ஓசோ கூறுகின்றார்.ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும். மனதிற்காக நாம் வாழவில்லை.
மனம் என்றால் என்ன எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த புரிதலே நாம் மனதிலிருந்து விடுபட வழி வகுக்கும். மாறாக மனதுடன் சண்டையிடுதோ அல்லது அடக்குவதோ மனதை மேலும் பலப்படுத்தும்.
நம் பிரஞையற்ற தன்மை நமக்குள் கீழ் நோக்கி ஆழமாக வேருண்டியுள்ளது.
பிரக்ஞையின்மை (unconscious)
உபபிரக்ஞையின்மை (subunconscious)
கூட்டுப்பிரக்ஞையின்மை (Collective unconscious)
பிரபஞ்ச பிரஞையின்மை (Cosmic unconscious)
என நமக்குள் நம்மையறியாமலே பல இருக்கின்றன.
ஒவ்வொன்றாக இவற்றை நாம் அகற்றவேண்டும்.
இவை ஒவ்வொன்றும் நம் கடந்தகாலங்கள். நம்மால் அடக்கப்பட்டவை. ஒதுக்கப்பட்டவை.

மனம்2

மனம் சிறந்த இரசாயன கணனி. சரியாகவும் நன்றாகவும் நாம் பயன்படுத்தினால் இதன் பலன் அதிகம். மனம் போன போக்கில் போகாமல் மனதை நாம் வழி நடாத்தவேண்டும். நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு வழி என்ன?
பிரங்க்ஞையுடன் மனதைக் கவனிப்பது.
நம் எண்ணங்களைக் கவனிப்பது.
அவற்றுடன் நம்மை அடையாளப்படுத்தாது கவனிப்பது.
இவற்றுடன் நம்மை அடையாளப்படுத்துவது என்பது
இதற்கு நாம் சக்தியை வழங்குகின்றோம் என்பதாகும்.
மாறாக இந்த எண்ணங்களுடன்
நாம் ஓத்துழைக்காமல் விடுவோமாயின்
அவற்றுக்கு வாழ்வு இல்லாது போய்விடும்.
நம் சக்தி தேவையற்று வீணடிக்கப்படாது.
இச் சக்தி நம் ஆரோக்கியமான
படைப்பாற்றலை நோக்கிச் செல்கின்றது.
ஒரு நிமிடம் எங்களால் நம் மனதைத்தொடர்ந்து,
அதனுடன் நம்மை அடையாளப்படுத்தாது
கவனிக்க முடியுமாயின்,
நாம் நம்முள் செல்வதற்கான
முதற்படியில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.
தொடர்ந்தும் கவனிப்போமாயின் எண்ணங்கள் இறந்துவிடும்.
நாம் மனதுக்கு அப்பால் (no-mind) சென்றுவிடுகின்றோம்.
இது ஒரு தியான முறை.
நாம் மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு
ஆனந்தமாக வாழ்வதற்கும் இது வழிசெய்கின்றது.
இலகுவான செய்முறை. ஆனால் கஸ்டமானது.
தொடர்ச்சியானதும் ஆழமான பயிற்சியும் தேவை.
சோக்கிரட்டீஸ் மனதை அதன் உச்சத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தினார்.
அதனால் தான் உண்மையை அறிவதற்காக தான் மரணிக்கும் சந்தர்ப்பத்தையும் தவறவிடவில்லை.
ஐன்ஸ்டைன் தன் பிரக்ஞையால் முக்கிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தார்.முக்கியமாக அணுச் சக்தியைக் கண்டு பிடித்தார். ஆனால் அவரது பிரக்ஞையற்ற மனதால் அணு குண்டைப் பயன்படுத்தி அழிவுக்குவழிகாட்டினார். காலம் கடந்து அதற்காக அவரால் வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.
ஆகவே மனம் என்ற உறுப்பில் எந்த தவறும் இல்ல.
இதை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதில் தான்
நம் வாழ்க்கை மட்டுமல்ல நாமும் உயர்கின்றோமா தாழ்கின்றோமா என தீர்மானிக்கப்படுகின்றது.
மனதை சரியான வழியில் பயன்படுத்தக்கூடிய
வழிநடாத்தக்கூடிய ஒரே சக்தி.
நம் பிரக்ஞை மட்டுமே.

ஞான மூலிகை

வள்ளலார் அருளிய ஞான மூலிகைகளுள் தூதுவளைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சாத்வீக உணவுகளிலேயே மிகவும் நுட்பமான உணவு தூதுவளையாகும். கரிசலாங்கண்ணி, பொற்றலை, கையாந்தகரை, தூதுவளை, வல்லாரை போன்ற ஞான மூலிகைகள் அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானால் புசிக்கப் பெற்று, உலகமெல்லாம் அவரால் பரப்பப்பட்டது.
வள்ளலாருக்கு முன்தோன்றிய சித்தர்கள் மூலிகைகளின் தன்மைகளைப் பற்றிச் சொல்லியிருந்த போதிலும், வள்ளலார் மூலிகைகளின் குணங்கû ளயும் தன்மைகளையும் சொல்லியிருப்பது, படிப்பவருக்குப் பசுமரத்து ஆணிபோல் பதியும்.
வள்ளல் பெருமான் தனது திருவருட்பாவில் நித்திய கரும விதி என்ற அகராதியில், உணவில் பச்சரிசி சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, தூதுவளை, பொன்னாங்கண்ணி போன்றவற்றைச் சேர்க்கும்படி கூறுகிறார். தூதுவளைக் கீரையுடன் மிளகு ஒரு பங்கு, சீரகம் காலே அரைக்கால் பங்கு, வெந்தயம் கால் பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு சேர்த்துச் சமைக்க வேண்டும் என்றும்; வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை இத்துடன் சேர்க்க வேண்டாம் என்றும் கூறுகிறார்.
இதிலிருந்து தூதுவளையின் மகத்துவம் நமக்குப் புலனாகிறது.

Monday, August 27, 2012

சர்வாங்க ஆசனம்:

சர்வாங்க ஆசனம்:
விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கைகளும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கவும். இரண்டு கால்களையும்சேர்த்து வைத்துக் கொள்ளவும். மூச்சைப் பிடித்து இரண்டு கால்களையும் அப்படியே மேலே தூக்கவும். இத்துடன் இடுப்பையும் தூக்கி முழு உடலும்மேல் நோக்கிய நிலையில் இருக்கும் படி வரவும். பிறகு இரண்டு கைகளையும் மடக்கி இடுப்புக்கு கீழே பிடித்து, உடலை நேராய் நிமிர்த்தவும். தலை முன்பக்கம் குனிந்து முகவாய்க்கட்டை மார்பில் அழுந்தும்படி பார்த்துக் கொள்ளவும். மூச்சை சாதாரணமாய் விடவும் வாங்கவும் செய்யவும்.
முதுகும் கால்களும் வளையாமல் நேராய் சேராய் இருக்க வேண்டும். கால்களை விறைப்பாய் வைத்துக் கொள்ளக் கூடாது. மிக தளர்த்தியாக தொய்யும் படி விட்டு விடவும். வாய் மூடியிருக்க வேண்டும். கைகளின் மேல் சரீர பாரம் முழுவதையும் போட்டு பிடிக்க கூடாது. கைகள் உடலை லேசாய் தாங்கியிருக்க வேண்டும். ஒவ்வொவருக்கும் பலம் இருக்கும் வரை இந்த ஆசனத்தில் இருந்து விட்டு பிறகு ஆசனததை கலைக்கலாம். இறங்கும் போது இடுப்பின் அடியில் தாங்கும் கைகளை தளர்த்தி கைகளின் மேலேயே உடலை மெதுவாக நழுவ விட்டு கொண்டே வந்து கால்களை தரையில் அமர்த்தவும். பிறகு கைகளை பக்கங்களில் நீட்டி வைத்து இளைப்பாறவும்.
மற்ற பயிற்சிகளை செய்து உடலை தன்வசத்தில் வைத்திருப்பவர்களுக்கு இந்த சர்வாங்கசனத்தை செய்வது சுலபமாக வரும். எந்த வித உடற்பயிற்சியும், யோகாசன பயிற்சியும் செய்யாதவர்களுக்குஇது சற்று கடினமாக இருக்கும். சிலருக்கு இரண்டு கால்களை மட்டும் தான் தூக்க வரும். இடுப்பை தூக்க முடியாத படி சிரமப்படுவார்கள். ஆனாலும் விடாமுயற்சியுடன் கைகளை நன்கு ஊன்றி, முடிந்த மட்டும் உடலைத் தூக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியும் தூக்க முடியவில்லையானால், இடுப்பை பாதி தூக்கிய நிலையில் கால்களை உயர்த்திய படி சற்று நேரம் இருக்க முயற்சி செய்யுவும். கால்களை தரையில் வைத்து விடக்கூடாது. கைகளை இடுப்புக்குஅடியில் கொடுத்து தாங்கிக் கொள்ளும் போது கால்கள் தரைக்கு வராது.
இது போல் 5 முதல் 6 தடவைகள் வரை பயிற்சி செய்தால் கூட நல்ல பலன் உண்டு. இந்த ஆசனம் பலருக்கும் தொடக்க கட்டத்தில் உடனடியாக செய்ய வராது. ஆனால் நாளாவட்டத்தில் சுலபமாக செய்ய கற்றுக் கொண்டு விடலாம். சிலர் உடல் முழுவதையும் தூக்கி முழு ஆசன நிலையையும் எட்டி விடுவார்கள். ஆனால் முகவாய்க்கட்டையானது மார்பில் இடிக்கும் அளவு செய்ய வராது. சிலர் வாயை ஆ வென்று திறந்து முகவாய்க்கட்டையை வைத்து மார்பை இடிக்க முயலுவார்கள். ஆனால் அப்படி செய்வது கூடாது. இந்த ஆசனம் செய்யும் போது வாய் மூடியே இருக்க வேண்டும்.
இப்படி முகவாய்க் கட்டை இடிக்க வராத நிலை இருப்பவர்கள், கைகளை இடுப்புக்கு அடியில் இன்னும் பலமாய் கொடுத்து முதுகை சரியாக நிமிர்த்தினால் முகவாய்க்கட்டைமார்பில் இடித்து ஜாலந்திர பந்தம் ஏற்படும்.
இந்த ஆசனத்தில் கால்கள் தலைக்குநேராய் இருக்க வேண்டியது முறையானாலும், சிலருக்கு அப்படிநேராய் வைத்திருக்க வேண்டுமானால், சிரமமிருக்கும். அப்படி வைப்பதால், கைகள் அதிக பலத்துடன் இடுப்பை தாங்கிப் பிடிக்க வேண்டியதிருக்கும். இதனால் சிலருக்கு கைகள் மரத்து போக வாய்ப்புண்டு. எனவே கைகள் மீது உடல் எடை முழுவதையும் போட்டு விடாமல், லேசாய் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் இந்த குறைகள் எல்லாம் ஏற்படாது.
சிலர் கால்களை விரைப்பாய் வைத்துக் கொள்வார்கள். அப்படி வைத்துக் கொண்டால், கால்களுக்குஅதிக ரத்தம் செல்லும். அதனால் நமது மனமும் அந்த இடத்துக்கே செல்லும். நமக்கு தைராய்டு கோளத்துக்கே அதிக இரத்தம் பாய வேண்டியதால், நமது மனத்தை தைராய்டு கோளத்தினிடமே செலுத்த முயற்சிக்க வேண்டும். முதலில் இந்த ஆசனம் செய்பவர்களுக்கு முதுகு, கழுத்து முதலியவை வலிக்கும். சில நாட்களில் வலி மறைந்து விடும்.
நீண்ட நேரம் செய்பவர்களுக்கு முழங்கை, கழுத்துப் பின்புறம் முதலிய இடங்களில் காய்ப்பு கட்டி விடும். எனவே, முடிந்த வரை இந்த பயிற்சியை நீண்ட கால அளவில் பயிற்சி எடுத்து கூட செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.
பலன்கள்:
உயிர்க்கோளமாகிய தைராய்டு இந்த ஆசனத்தால் நன்றாக பலன் பெறுகிறது. இதனால் சகல நோய்களும் விலகுகிறது. நரம்பு பலகீனம், ரத்தமின்மை, சோம்பல், தலைவலி, அசீரணம், மலச்சிக்கல், மூலம், வயிற்றுவலி, குன்மம், மூத்திரக் கோளாறுகள், மார்பு வலி, இருதய பலவீனம், ரத்தக் கொதிப்பு, அப்பெண்டிசிடிஸ், சகலவாதங்கள், காலில் குத்தல், பெரும் வியாதி, காலின் கணுக்களில் நீர் தங்குதல், மலேரியா, மற்ற ஜுரங்கள், மலட்டு தனம், தைமஸ் கிளாண்ட், வீர்யமின்மை, மலட்டு தனம்,கண்டமாலை, ஆல்புமின், சர்க்கரை வியாதி கோளாறுகள், வயிற்று போக்கு, மனநிலை கோளாறுகள், வலிப்பு நோய்கள் உள்பட பல வியாதிகள் தீரும்.

தியான யுக்தி5

மனதை சந்தோஷமாகவே வைத்திருத்தல்
இது உனது வாழ்க்கையின் அடிப்படைவிதிகளில் ஒன்றாகவே மாறட்டும். நீ ஏதாவது எதிர்மறையானதை கடந்துவர நேர்ந்தால் கூட அதில் எதையாவது நேர்மறையானதை காண முயற்சி செய். ஏதாவது ஒன்றை கண்டு பிடிக்க முடியும். எதிர்மறையிலும் நேர்மறையானதை கண்டுபிடிக்க கூடிய தகுதி நீ பெற்று விட்டால் நீ சந்தோஷத்தில் நடனமாடுவாய்.
முயன்று பார், வாழ்வின் புது கண்ணோட்டதை முயற்சி செய். நேர்மறையாளனாக இரு, எதிர்மறையாளனாக இராதே. எதிர்மறையாளன் தன்னைச் சுற்றிலும் நரகத்தை உருவாக்கிக் கொண்டு தானும் அதில் இருப்பான். நீ எந்த உலகத்தை உருவாக்குகிறாயோ அதில்தான் நீ இருப்பாய்.

தியான யுக்தி4

உனது நாளின் ஆரம்பமும் முடிவும்சிரிப்பாக இருக்கட்டும்
சில ஜென் மடாலயங்களில் ஒவ்வொரு துறவியும் காலை எழுந்தவுடன் சிரிக்க வேண்டும், மேலும் இரவு படுக்கப்போகும் முன்னும் சிரிக்க வேண்டும். நாளின் முதல் விஷயமும் கடைசி விஷயமும் சிரிப்பதாகத்தான் இருக்க வேண்டும். இதை நீ முயற்சி செய்துபார். இது மிகவும் அற்புதமானது. அது பார்ப்பதற்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஏனெனில் சுற்றிலும் கடுகடுப்பான மக்கள்தானே இருக்கிறார்கள். அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நீ மகிழ்ச்சியோடு இருந்தால் இவர்கள் ஏன் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்று கேட்பார்கள்.அந்த கேள்வியே மடத்தனமானது.
மெது மெதுவாக சிரிப்பு அதிகமாவதை நீ காணலாம். முயற்சி செய்து பார். நீ சிரிக்க சிரிக்கஅதிக அளவு மதத்தன்மையடைவதை நீ உணரலாம்.

தியான யுக்தி3

பார்வையாகவே மாறி விடு
ஒரு காரிலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்கிறாய் – நீ அப்போது என்ன செய்யப் போகிறாய் கவனத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய். காலத்தை வீண் செய்யாதே. அரைமணி நேரம் ரயிலில் அமர்ந்திருக்கப் போகிறாய் – கவனத்தை கூர்மைப்படுத்த முயற்சி செய். வெறுமனே அங்கிரு, எதையும் சிந்தனை செய்யாதே. யாரையாவது பார், ரயிலைப் பார், வெளியே பார்.ஆனால் வெறுமனே அங்கிரு, எதையும் சிந்திக்காதே. சிந்தனையை நிறுத்தி விடு. அங்கிரு, பார். உனது பார்வை நேரடியாகவும், ஊடுருவுதாகவும் அமையட்டும். நீ எங்கே பார்த்தாலும் அந்த பார்வைதிரும்ப பிரதிபலித்து வரும்போது நீ பார்ப்பவனைப்பற்றிய விழிப்புணர்வு அடைவாய்.

தியான யுக்தி2

ஒரு வினாடியைக் கூட வீணாக்காதே
காலத்தை வீணடிக்காதே. நீ எதையாவது விரும்பவில்லையென்றால் அது என்னவாக இருந்தாலும் அதில் இருப்பது ஒரு கணமேயானாலும் அது தற்கொலையே. அதனால் என்ன இழப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து வெளியே வந்துவிடு. அது உனது சக்தியை விடுவிக்கும், நீ வேறெங்காவது இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒரு கதவை நீ மூடினால் வேறொரு கதவு திறக்கும். நீ இந்த கதவை மூடவில்லையென்றால் வேறு எந்த கதவும் திறக்காது – ஏனெனில் வேறொரு கதவை திறப்பது இந்த சக்திதான்.
நீ ஒரே பெண்ணை தொடர்ந்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பதில் நீ அவளை விரும்பாமல், அவளுடன் இருப்பதில் நன்றாக உணராமல் இருந்தால் அது ஒரு தொடர் பிரச்னையாகத்தான் இருக்கும். அது உனக்கு மட்டும் கெடுதலல்ல, அவளுக்கும் கெடுதல்தான். நீ உன்னிடம் பரிவு காட்டவில்லையென்றால் பரவாயில்லை, அவளிடமாவது பரிவு காட்டு. அவளிடமாவது மனித்தன்மையுடன் நடந்து கொள். நீ அவளை குறுக்குவது மட்டுமல்ல, உன்னையும்தான் குறுக்கிக் கொள்கிறாய். துன்பம் தரும் உறவு எதுவாக இருந்தாலும் அது இருவரையும்தான் பாதிக்கும்.
இந்த உறவு மட்டுமல்ல, நீ இந்த உறவில் தொடர்ந்து இருந்தால் அதுவருங்காலத்து உறவையும் பாதிக்கும். இது உனது கடந்தகாலத்தின் பாகமாக மாறி விடுவதால் அது பாதிக்கிறது. அது உன்னைச் சுற்றிக் கொண்டிருக்கும். நீ இதுபோன்ற பெண்ணையே கண்டுபிடித்து, இதுபோன்ற சிக்கலில் மறுபடி மறுபடி மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாகிறது. இது உனது பழக்கமாகிவிடுகிறது.
நீ எந்த தொடர்பாவது நன்றாக இல்லை என்பதை உணர்ந்தால் நான் சொல்வது நீ அதிலிருந்து வெளியே வந்துவிடு, அதிலிருந்து வெளியே குதித்துவிடு. ஒரு வினாடி கூட வீணாக்காதே.

மெளனத்தில் விளைந்த முத்துகள்

ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம், ஆனால் அதற்குக ஒரே ஒரு பதில்தான். உனது விழிப்புணர்வு.
 வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல. மனித மனங்களை தவிர.
 வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள். வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே.
 நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை.
 வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது எப்படி என்றுஉனக்கு தெரிந்துவிட்டால் இந்த வாழ்வின் முழு இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும்.
 வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை ஒருவாய்ப்புதான், ஒரு வாசல்தான்.
 கொடுப்பவனாக இரு. உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள்.
 அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும். வாழ்வு அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும், பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.
 இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டுவிடமுடியும் ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்.
 தேடுதல் அழிவற்றதை நோக்கியதாகஇருக்கவேண்டும் மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது.
 ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும். அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல.
 எல்லா பயங்களுடனும் அறியாத்தின் சவாலை ஏற்றுக் கொள்வதே தைரியம். பயம் அங்கிருக்கும், ஆனால் திரும்ப திரும்ப அந்த சவாலை ஏற்றுக்கொண்டால் மெதுமெதுவாக அந்த பயங்கள் மறைந்துவிடும்.
 உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாக பார். நீ ஆழமாக பார்க்க, பார்க்க அவை சிறிதாக தெரியும்.
 நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது ஒரு விஷயமே அல்ல.நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை.
 இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது, இந்த கணம் மட்டுமே உள்ளது நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்.
 ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்துவிடுகிறது.
 உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதைகவனி.

தியான யுக்தி2

உனது பயத்தை எதிர்கொள்ளல்
எப்போது – ஒவ்வொரு நாள் இரவும்
காலம் – 40 நிமிடங்கள்
முதல் படி – மிக மோசமானதை கற்பனைசெய்து கொள்
உனது அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் அமர்ந்து பயப்பட ஆரம்பி. எல்லா விதமான பயங்கரங்களையும் பற்றி சிந்தனை செய். - உன்னுள் பயத்தை ஏற்படுத்தும் எல்லாவற்றையும் –உன்னுடைய கற்பனையின் மூலம் நீ உண்மையாகவே பயப்பட ஆரம்பி. பேய்,பிசாசு என எல்லாவற்றையும் பற்றிகற்பனை செய். அவை உன்னை கொல்வது போலவும், கற்பழிக்க முயற்சி செய்வது போலவும், உன்னை மூச்சு திணற செய்வது போலவும் கற்பனை செய். பயத்தினுள் எவ்வளவு ஆழமாக போக முடியுமோ அவ்வளவு ஆழமாக போ. என்ன நிகழ்ந்தாலும் சரி, அதனுள் செல்.
இரண்டாவது படி – பயத்தை ஏற்றுக் கொள்
பகலிலோ, வேறு நேரத்திலோ எப்போது பயம் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள். அதை தவிர்க்காதே. நீ கடந்து வர வேண்டிய தவறான ஒன்று என அதை நினைக்காதே. அது இயல்பானது. அதை ஏற்றுக் கொள்வதாலும் இரவில் அதை வெளிப்படுத்துவதாலும் விஷயங்கள் மாற துவங்கும்.

காலிக் கோப்பை

நான்சேன் என்பவர் மிகப் பிரபலமான ஜென் ஞானிகளில் ஒருவர். அவரைப் பற்றி பல கதைகள் கூறப் படுகின்றன. அதில் ஒன்று நான் உங்களுக்கு பல முறை கூறியிருக்கிறேன். நான் அதை திரும்பக் கூறுகிறேன். ஏனெனில் இது போன்ற கதைகளை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் நீங்கள்அதை நன்கு உள்வாங்கிக் கொள்ள முடியும். அவை உங்களை வளப்படுத்தும். ஒவ்வொருநாளும் நீங்கள் ஊட்டம் பெற வேண்டும். நேற்று காலை நான் உணவு சாப்பிட்டு விட்டேன், அதனால் இப்போது எனக்கு உணவு வேண்டாம் என்று நீங்கள் கூறுவதில்லை. ஒவ்வொரு நாளும் நீங்கள் சாப்பிட்டாக வேண்டும். நேற்று நான் சாப்பிட்டுவிட்டேன். இப்போது ஏன் சாப்பிடவேண்டும் என்று கேட்பதில்லை.
இந்த வித கதைகள் – இவை உங்களை வளப்படுத்தும் கதைகள். இந்தியாவில் இவற்றைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட வார்த்தை உண்டு. அதை மொழிமாற்றம் செய்ய முடியாது, ஆங்கிலத்தில் “படிப்பது” என்ற ஒரு வார்த்தை உண்டு. இந்தியாவில் இரண்டு விதமான வார்த்தைகள் உண்டு. ஒன்று படிப்பது, மற்றொன்று படித்ததையே திரும்ப திரும்ப படிப்பது. அதன் ஒரு பாகமாகி விடுவது. ஒவ்வொரு நாளும் காலையில் நீ கீதையை படிக்கிறாய். அது படிப்பது அல்ல.ஏனெனில் நீ அதை பலமுறை படித்திருக்கிறாய். இப்போது அதுஒருவிதமான வளப்படுத்துதல். நீ அதை படிக்கவில்லை. நீ அதை ஒவ்வொரு நாளும் உண்கிறாய்.
அது ஒரு சிறந்த அனுபவமாகும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் நீ வெவ்வேறு விதமான மனநிலையில் வருவதால் பல்வேறு விதமான அர்த்தங்கள் புரிகின்றன. அதே புத்தகம், அதே வார்த்தைகள் ஆனால் ஒவ்வொரு நாளும் புது ஆழத்தை நீ உணர்கிறாய். ஒவ்வொரு நாளும் புதிதான ஏதோ ஒன்றை படிப்பது போன்று நீ உணர்கிறாய். ஏனெனில் கீதை அல்லது அது போன்ற புத்தகங்களில் ஆழமான உண்மை உண்டு. அவற்றை ஒருமுறை படித்தால் மேலோட்டமாக இருக்கும், இரண்டாவது, மூன்றாவது தடவை படிக்க படிக்க ஆழ்ந்து செல்வாய். ஆயிரம் தடவைகள் படித்தபின் அந்த புத்தகங்களை முழுவதுமாக படிப்பது என்பது சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்வாய். அதிக அளவு கவனமாக, விழிப்புணர்வுடன் இருக்க இருக்க உனது தன்னுணர்வு ஆழமாகும்.

தியான யுக்தி

பயத்திலிருந்து அன்புக்கு
நேரம் – 40 – 60 நிமிடங்கள்
முதல் படி – சக்தியை லயப்படுத்துதல்
வசதியாக அமர்ந்து கொள். கை கோர்த்து வலது கை இடது கையின் அடியில் இருக்கும்படி வைத்துக் கொண்டு கைகட்டை விரல்களை இணைத்துக் கொள். இது சக்தியை ஒருவிதத்தில் குறிப்பிட்ட தொடர்பில் வைத்திருக்கும். இடதுகை வலது மூளையுடனும் வலது கை இடது மூளையுடனும் இணைந்துள்ளது.இடது மூளை காரண காரியமுடையது, கோழை. வலது மூளை உள்ளுணர்வுடன் சம்பந்தப்பட்டது. ஒரே மனிதன் அறிவார்த்தமானவனாகவும் வீரனாகவும் இருக்க முடியாது. ஒருவனே இரண்டுமாக இருப்பது சாத்தியமில்லை.
இரண்டாவது படி – வாய் மூலம் சுவாசித்தல்
தளர்வாக இரு, கண்களை மூடிக் கொள். உனது கீழ்தாடை தளர்வாக இருக்கட்டும். அப்போதுதான் நீ உனது வாய் மூலமாக சுவாசிக்க முடியும்.
நீ உனது மூக்கின் மூலமாக சுவாசிக்காமல் வாய் மூலமாக சுவாசிக்கும்போது நீ சுவாசிப்பதற்கு ஒரு புதிய வழிமுறையை உண்டாக்குகிறாய். அதனால் இந்த பழைய முறையை மாற்ற முடியும். மேலும் நீ மூக்கின் மூலமாக சுவாசிக்கும்போது நீ தொடர்ந்து உனது மூளையை தூண்டுகிறாய். மூக்கு பிளவுபட்டது. வாய் பிளவுபடாதது.
அதனால் நீ வாய் மூலமாக சுவாசிக்கும்போது உனது மூளையை இயக்கமுடியாது – சுவாசம் நெஞ்சைவந்தடைகிறது.
இது பிளவற்ற, அமைதியான, புதிய விதமான தளர்வை உருவாக்கும். உனது சக்தி ஒரு புது வழியில் வழிந்தோட ஆரம்பிக்கும்.

ஜென் கதை9

ஒரு குரு வேலை செய்யும் விதம் திருடன் வேலை செய்யும் விதத்தைப் போன்றது.
ஒரு ஜென் கதை. ஜென்குருக்கள் இதைமிகவும் விரும்புவர். நீ இந்த கதையை முதன்முறையாக கேட்கும்போது மிகவும் ஆச்சரியப் படுவாய். – இது ஒரு திருடன் குருவான கதை.
ஜப்பானில் ஒரு திருடன் மிகச் சிறந்த திருடனாக இருந்தான். அவன் நாடு முழுவதும் பிரபலமானவனாக, எல்லோருக்கும் தெரிந்தவனாக இருந்தான். அவன் திருட்டில் கை தேர்ந்தவனாக இருந்ததால் யாராலும் அவனை பிடிக்க முடியவில்லை. அவன் கையும்களவுமாக பிடிபட்டதேயில்லை. – அவன்தான் திருடியவன் என எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும்கூட – அரசரின் கஜானாவிலிருந்து கூட அவன் திருடியிருக்கிறான். அவன் தனது முத்திரையை பதித்துவிட்டு போவதால் அவன்தான் வந்து போயிருக்கிறான் என எல்லோரும் அறிவர்.
அதன்மூலம் அது ஒரு கௌரவமான விஷயமாக மாறிவிட்டது. அந்த கை தேர்ந்த கள்வன் உன்னிடம் வந்து திருட உன்னிடம் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது என்பதே ஒரு மரியாதையாக மாறிவிட்டது. அதனால்அது ஒரு கௌரவம். மக்கள், “நேற்று இரவு அந்தக் கள்வன் என் வீட்டிற்க்கு வந்திருந்தான். எனபெருமையாக சொல்லிக் கொண்டனர்.
ஆனால் அவனுக்கு வயதாகி விட்டது. அவனது மகன் இளைஞன். அவன் தனது தந்தையிடம், உங்களுக்கு வயதாகி விட்டது. அந்தக் கலையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். எனக் கேட்டான்.
அந்த தந்தை, சரி இன்று இரவு என்னுடன் வா – ஏனெனில் அது சொல்லித் தரக் கூடிய விஷயமல்ல. என்னுடைய ஆற்றலை கண்டுக் கொள்ளத் தான் வேண்டும். உனக்கு புத்திசாலித் தனமிருந்தால் அதை நீ கணடு கொள்வாய். அதை உனக்கு கற்றுத் தர முடியாது, ஆனால் உன்னால் அதை பிடித்துக் கொள்ள முடியும். நான் உனக்கு தர முடியாது, ஆனால் உன்னால் தெரிந்து கொள்ள முடியும். என்னுடன் இன்றிரவு வா. பார்க்கலாம். என்றான்.
முதல்தடவை என்பதால் மகன் மிகவும் பயந்தான். இயல்புதானே!
சுவற்றை உடைத்து மாளிகைக்குள் சென்றனர். அந்த வயதான காலத்தில்கூட தந்தையின் கரங்கள் நடுங்கவில்லை, ஆடவில்லை, ஒரு டாக்டரின் கரங்கள் போல ஆடாமல் அசையாமல் உறுதியாக நின்றது. அவன் தனது சொந்த வீட்டில் வேலை செய்வதுபோலபயமின்றி சுவற்றில் ஓட்டை போட்டான். சத்தம் கேட்டுவிடுமோ என சந்தேகமே படாமல் தனது வேலையின் திறமை மீது நம்பிக்கை கொண்டு அங்கே, இங்கே யாராவது வருகிறார்களா என திரும்பியே பார்க்கவில்லை. ஆனால் அது குளிர்கால இரவாக இருந்தபோதிலும் இளைஞனுக்கு வேர்த்து கொட்டியது. அவன் பயத்தில் நடுங்கினான். ஆனால் தந்தை தனது வேலையை சப்தமின்றி செய்தான்.
கள்வன் வீட்டினுள் நுழைந்தான். மகன் தொடர்ந்து நுழைந்தான். அவனது கால்கள் நடுங்கியது. அவன் எந்த விநாடியும் விழுந்துவிடுவோம் என நினைத்தான். அவனுக்கு சுயஉணர்வேஇல்லை. ஏனெனில் பயம்......... பிடிபட்டுவிட்டால் பின் என்ன செய்வது.
தந்தை அந்த வீட்டினுள் ஏதோ அது அவனது சொந்த வீடு போல நுழைந்தான். அவனுக்கு அந்த வீட்டைப்பற்றி, வீட்டினுள் உள்ளபொருட்கள் இருக்கும் இடம் எல்லாமே தெரிந்திருந்தது. அந்த இருட்டில் கூட எந்த சாமான்கள் மீதும் மோதிக்கொள்ளாமல், கதவில்முட்டிக்கொள்ளாமல் சென்றான். சப்தமேயில்லாமல், எந்த சப்தமும்செய்யாமல் அவன் அந்த மாளிகையின்உள்ளறையை சென்றடைந்தான். அவன் ஒரு அலமாரியை திறந்து மகனிடம் உள்ளே போய் ஏதாவது விலைமதிப்பானபொருட்கள் இருக்கிறதா என பார்க்கச் சொன்னான். மகன் உள்ளே போனான்.
தந்தை கதவை மூடி வெளியே தாழிட்டுவிட்டு, திருடன், திருடன் ஓடிவாங்க என கத்தியபடி சுவற்றில் அவர்கள் உருவாக்கியிருந்த ஓட்டை வழியாக தப்பிப் போய்விட்டான்.
இப்போது இது மிகவும் அதிகம். மகனால் என்ன இது என புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது அவன் அந்த அலமாரிக்குள்நடுங்கி வேர்த்துக் கொட்டியபடி இருந்தான். வீடு முழுவதும் விழித்துக் கொண்டு விட்டது. திருடன் எங்கே என தேடியது. அப்பாவா இது, என்னை கொன்றே விட்டார், என நினைத்தான். என்ன வகையான பாடம் இது அவன் இதுபோன்ற ஒரு விஷயத்தை கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. தந்தை பயங்கரமான கனவை மகனுக்கு தந்து விட்டார். இவன் பிடிபடுவது உறுதியாகி விட்டது. தந்தை வெளியேயிருந்து கதவை தாழிட்டுவிட்டார். மகன் கதவை திறந்து தப்பித்து போகமுடியாது.
ஒரு மணிநேரத்திற்கு பின் மகன் வீட்டை அடைந்தபோது தந்தை குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். மகன் அவன் போர்வையை விலக்கி, என்ன மடத்தனம் இது, எனக் கேட்டான்.
தந்தை, நீ திரும்பி வந்து விட்டாய். என்ன நடந்தது என சொல்லவேண்டிய அவசியம் இல்லை – நீயும் போய் தூங்கு. இப்போது உனக்கும் இந்தக் கலை தெரிந்துவிட்டது. நாம் இதை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் மகன், என்ன நடந்ததென்று நான் உங்களிடம் சொல்லியே தீர வேண்டும். என்றான்.
தந்தை, நீ சொல்ல விரும்பினால் சொல், மற்றபடி அது எனக்கு அவசியமில்லை. நீ திரும்பி வந்ததே போதுமான அத்தாட்சி. நாளை இரவிலிருந்து நீயே சொந்தமாக போய் செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு திருடனுக்கு தேவையான புத்திசாலித்தனமும் சுதாரிப்பும் கவனமும் உன்னிடம் உள்ளது. எனக்கு உன்னைப் பற்றி மிகவும் சந்தோஷமாக உள்ளது, என்றான்.
ஆனால் மகன் மிகவும் ஆர்வமாக இருந்தான். அவன் முழு விஷயத்தையும் விவரித்து சொல்ல விரும்பினான். அவன் அத்தகைய மிகப் பெரிய வேலை செய்திருந்தான். அவன், கேளுங்களேன். இல்லாவிடில் என்னால் தூங்கவே முடியாது. நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் கிட்டத்தட்ட என்னை கொன்றே விட்டீர்கள். என்றான்.
தந்தை, அது அப்படிப்பட்ட கடினமான காரியம்தான்.

விழிப்புணர்வுடன் இருங்கள்2

லின்-சீ, ஒருநாள் காலையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று யாரோ ஒருவர், “எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள்: நான் யார்?” என்று கேட்டார். லின்-சீ கீழே இறங்கி வந்து அந்த மனிதரை நோக்கி சென்றார். அந்த முழு அறையும் மிகவும் அமைதியானது. அவர் என்ன செய்யப் போகிறாரோ? இது ஒரு எளிய கேள்விதான். இதற்குஅவர் தனது இருக்கையில் இருந்தே பதில் அளித்திருக்கலாம். அவர் அந்த ஆளிடம் வந்தார். அந்த அறையேஅமைதியாக இருந்தது. லின்-சீ கேள்வி கேட்டவரின் முன்பு, அவரின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றார். அது ஒரு ஊடுருவிச் செல்கிற தருணமாக இருந்தது. எல்லாமே நின்று விட்டது. கேள்வி கேட்டவருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.லின்-சீ அவரது கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது லின்-சீ அவரிடம், “என்னிடம் கேட்காதே. உனக்குள் சென்று இந்தக் கேள்வியைக் கேட்பவன் யார் என்று கண்டுபிடி. உனது கண்களை மூடிக் கொள். ‘நான் யார்’ என்று கேட்காதே. உனக்குள் சென்று, இந்தக் கேள்வியைக் கேட்பது யார் என்று கணடுபிடி. உள்ளே உள்ள கேள்வி கேட்பவர் யார்? என்னை மறந்துவிடு. கேள்வியின் மூலத்தைக் கண்டுபிடி. உனக்குள் ஆழ்ந்து செல்!” என்றார்.
அப்போது அந்த மனிதன் கண்களை மூடிக் கொண்டு, அமைதியாகி விட்டதாகவும், மேலும் திடீரென்று அவன் மெய்ஞானம் பெற்றவன் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவன் கண்களைத் திறந்தான், சிரித்தான், லின்-சீயின் காலைத் தொட்டு வணங்கினான். மேலும் அவரிடம், “நீங்கள் எனக்கு பதிலளித்துவிட்டீர்கள். நான் ஒவ்வொருவரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டு வந்தேன். அப்போது எனக்கு அநேக பதில்கள் கொடுக்கப் பட்டன. ஆனால் எதுவும் அதற்கான பதிலாக நிரூபணம் ஆகவில்லை. ஆனால் இப்போது நீங்கள் எனக்கு பதிலளித்துவிட்டீர்கள்.” என்றான்.
“நான் யார்?” இதற்கு, யாரால் பதில் அளிக்க முடியும்? ஆனால், அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் – கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அமைதியாக இருக்கும்போது, குண்டூசி விழும்சப்தம்கூட கேட்கும். அந்த அமைதியில் – லின்-சீ கீழே இறங்கி வந்து, தனது ஊடுருவும் கண்களால் அவனைப்பார்த்து, அதன்பிறகு அவனிடம், “உனது கண்களை மூடிக்கொள். உனக்குள் போ.போய், கேள்வி கேட்கும் அந்த நபர்யார் என்று கண்டுபிடி. நான் பதில் சொல்ல வேண்டும் என்று காத்திருக்காதே. கேள்வி கேட்டவர் யார் என்று கண்டுபிடி.” என்றார். அப்போது, அந்த மனிதனும் கண்களை மூடிக் கொண்டான். அந்தச் சூழ்நிலையில் நடந்தது என்ன? திடீரென்று அவன், அவனது மையத்திற்குச் சென்றுவிட்டான். திடீரென்று அவன் தனக்குள் உள்ள அந்த நடுப்பகுதி குறித்து விழிப்புணர்வு பெற்று விட்டான்.
இது, நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது. மேலும், விழிப்புணர்வு என்பதற்கு இப்படி உங்களுக்குள் உள்ள அந்த நடுப்பகுதியை கண்டுபிடிப்பதற்கான வழிமுறை என்று அர்த்தம். நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வு இல்லாமல் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களிடமிருந்து மிகவும் அதிக தூரம் விலகி இருக்கிறீர்கள். அதே போன்று, நீங்கள் எந்த அளவுக்கு அதிக தன்னுணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக வருவீர்கள். உங்களது தன்னுணர்வுமுழுமையாக ஆகிவிடும்போது, நீங்கள் உங்களது மையத்தில் இருப்பீர்கள். உங்களது தன்னுணர்வு குறைவாக இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பீர்கள். நீங்கள் தன்னுணர்வு இல்லாமல் இருந்தால்,நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பதால், அங்கே உங்களது மையம் முற்றிலுமாக மறக்கப் பட்டு விடுகிறது. எனவே இந்த இரண்டு வழிகளில் தான் நீங்கள் நகர்ந்து செல்வது சாத்தியமாகும்.
நீங்கள் வட்டத்துக்குள் வெளிப்பரப்பிற்கு நகர்ந்து செல்லலாம். – அதன்பிறகு, நீங்கள்தன்னுணர்வற்ற நிலைக்கு நகர்ந்து செல்வதாகிவிடும். உட்கார்ந்துகொண்டு ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதும், எங்கோ உட்கார்ந்துகொண்டு இசையை கேட்டுக் கொண்டிருக்கும்போதும், நீங்கள் உங்களை மறந்து போக முடியும், - அப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள். அதே போன்று, பகவத்கீதையை படிக்கும்போதும் அல்லது பைபிள் அல்லது குரானை படிக்கும்போதும் நீங்கள் உங்களை மறந்து போக முடியும் – இப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள்.
நீங்கள் என்ன செய்தாலும், உங்களால் உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியுமெனில், அதன்பிறகு நீங்கள் மையத்தை நெருங்கி வருவீர்கள். அதன்பின்னர், ஒருநாள் திடீரென்று நீங்கள் அந்த மையத்தில் இருப்பீர்கள். அதன்பிறகு உங்களுக்கு சக்தி வந்துவிடும். அந்த சக்திதான் நெருப்பு. இந்த பிரபஞ்சம் முழுவதும், இந்த உயிர்கள் அனைத்தும் அந்த சக்தியுடன்தான்,அந்த நெருப்புடன்தான் உள்ளது. நெருப்பு என்பது பழைய பெயர். இப்போது அவர்கள் அதை மின்சாரம் என்று அழைக்கின்றனர். மனிதன் அதை அநேக அநேக பெயர்களால் அடையாளமிட்டு வந்திருக்கிறான். ஆனால் நெருப்பு என்பது சிறந்தது. மின்சாரம் என்றால் கொஞ்சம் உயிரற்றது போலத் தெரிகிறது. ஆனால் நெருப்பு என்னும்போது, அது உயிர்த்துடிப்புள்ளதாகத் தெரிகிறது.
எனவே நிறைமனதுடன் செயலாற்றுங்கள். இது ஒரு நீண்ட கடினமான பயணம். மேலும், ஒரு சிறு நொடிப் பொழுதுகூட விழிப்புணர்வுடன் இருப்பது கடினம். இந்த மனம் இடைவிடாது கண்சிமிட்டிக் கொண்டே இருக்கும். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்றுஅல்ல. இது கடினமானது, இது சிரமமானது. ஆனால் இது சாத்தியமில்லாதது அல்ல. இது சாத்தியமானது.

ஜென் தத்துவங்கள்

ஈகன் ஹெரிக்கல் என்பவர், ஒரு ஜென்குருவிடம் கற்று வந்தார். மூன்று வருடங்களாக அவர் வில்வித்தை கற்று வந்தார். ஆனால், அந்த குருவோ எப்போது பார்த்தாலும், “நீ செய்வது நன்றாகத் தான் உள்ளது. ஆனால் இதுபோதாது.” என்பார். ஹெரிக்கல் இப்போது ஒரு வில் வித்தைக்காரராக ஆகி விட்டார். அவரது குறி, நூறு சதவீதம் சரியாகஇருந்தது. என்றாலும்கூட, அந்த குரு, “நீ நன்றாகத் தான் செய்கிறாய். ஆனால் இது போதாது.” என்று கூறுவார்.
அதைக் கேட்ட ஹெரிக்கல், “இப்படி நூறு சதவீதம் தவறாமல் அம்பு எய்தாலும் போதாதா? அப்படியானால், உங்களது எதிர்பார்ப்புதான் என்ன? நான் எப்படி இன்னும் முன்னேற முடியும்? நூறு சதவீத துல்லியத்தைவிடவும் நீங்கள் இதற்குமேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த ஜென்குரு, “எனக்கு உனது வில் வித்தையைப் பற்றியும், உனது குறி பார்க்கும் திறனைப் பற்றியும் கவலை இல்லை. எனது கவலை, உன்னைப் பற்றிதான். நீ முழு தொழில்நுட்ப கலைஞர் ஆகிவிட்டாய். ஆனால் உனது வில்லை விட்டு உனது அம்பு வெளியே செல்லும்போது, நீ உன்னைப் பற்றிய விழிப்புணர்வுடன் இல்லை. இது உபயோகமற்றது! அம்பானது குறியைச் சென்றடைவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு உன் மீதுதான் அக்கறை! உனது வில்லில்இருந்து அம்பு புறப்படும்போது, உனக்குள்ளும் உனது தன்னுணர்வானது அம்பாக வேண்டும்.வெளியில் நீ உனது குறியை தவறவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் நீ உனக்குள் உள்ள அந்த இலக்கினை தவறவிடக் கூடாது. ஆனால், இப்போது நீ அதை தவறவிட்டுவிடுகிறாய். நீ ஒரு தேர்ச்சி பெற்ற தொழில்நுட்ப கலைஞன் ஆகிவிட்டாய். ஆனால் நீ செய்வதெல்லாம் மற்றவர்களைப் பார்த்து, அதைப் போல செய்வதாகும்.” என்று கூறினார். ஆனால் மேலை நாட்டு மனதை அல்லது நவீனகால மனதை உடையவருக்கு இதைப்புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. இது முட்டாள்தனம் போலத் தெரிந்தது. குறி பார்த்து அம்பு விடுவதுதான் வில் வித்தையின் திறமையாகும்.
கொஞ்சம் கொஞ்சமாக ஹெரிக்கல் ஏமாற்றம் அடைந்தார். எனவே ஒருநாள் அவர் வந்து, “நான் சென்று வருகிறேன். இது என்னால் முடியாது! இது சாத்தியப் படாது! நீங்கள் ஏதாவது ஒன்றை குறி பார்க்கும்போது, உங்களது விழிப்புணர்வு உங்களது குறியை நோக்கித் தான் செல்லும். அந்தப் பொருளை நோக்கித் தான் செல்லும். மேலும், நீங்கள் வெற்றிகரமான ஒரு வில் வித்தைக் காரராக இருந்தால், நீங்கள் உங்களை மறந்து விட வேண்டும். நீங்கள் இலக்கை மட்டுமே நினைக்க வேண்டும். மற்றவற்றை மறந்துவிட வேண்டும். இலக்கு மட்டுமே அங்கு இருக்க வேண்டும்.” என்றார். ஆனால் அந்த ஜென்குருவோ, ஹெரிக்கலிடம் மீண்டும் அவர் தனக்குள் மற்றொரு இலக்கினை உருவாக்கும்படி தொடர்ந்து நிர்பந்தித்தார். அந்த அம்பானதுஇருமுனை கொண்டதாக இருக்க வேண்டும். ஒருமுனை வெளியில் உள்ள இலக்கினை குறி பார்த்துக் கொண்டும், மறுமுனை இடைவிடாமல் உங்களுக்கு உள்ளே உள்ள இலக்கினைஅதாவது, ஆன்மாவை குறி பார்த்தும் இருக்கவேண்டும், என்றார்.
“அப்படியானால் நான் போகிறேன். எனக்கு இது சாத்தியப்படாது போல்தெரிகிறது. உங்களது நிபந்தனைகளைஎன்னால் நிறைவேற்ற முடியாது”. என்று கூறினார். எனவே புறப்படுகின்ற அந்த நாளில், அவர் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் குருநாதரிடம் விடைபெற்று செல்ல வந்திருந்தார். அப்போது அந்த குரு வேறு யாரோ ஒருவருக்கு இலக்கினை குறி பார்க்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். முதல்முறையாக ஹெரிக்கல் அதில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார். அவர் விடைபெறுவதற்காகவே வந்திருந்தார். அவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். குரு, தான் கற்றுக் கொடுப்பதை நிறுத்தியவுடன் ஹெரிக்கல் அவரிடம் கூறிவிட்டு விடை பெறலாம் என்று இருந்தார்.
ஆனால் அப்போது திடீரென அவர் அந்த குருவையும், அவரது இருமுனை கொண்ட தன்னுணர்வையும் கண்டு கொண்டார். அப்போது குரு குறிபார்த்துக் கொண்டிருந்தார். மூன்று ஆண்டுகளாக ஹெரிக்கல் இதே குருவுடன் கூட இருந்தார். ஆனால் அப்போதெல்லாம் அவர் தனது சொந்த முயற்சி பற்றிதான் அக்கறை கொண்டிருந்தார். அவர் ஒருபோதும்இந்த குருவைப் பார்த்தது இல்லை; இந்த குரு என்ன செய்கிறார் என்று பார்த்தது இல்லை. முதன்முறையாக அவர் அப்போது குருவை பார்த்து அதை உணர்ந்தார். அப்போது தானாகவே, திடீரென்று அவரிடமிருந்து வில்லை வாங்கினார். இலக்கினை குறி பார்த்தார். அதன்பின்னர் அம்பை விட்டார். அப்போது அந்த குரு, “சரி, முதல்முறையாக நீ அதைச் செய்துவிட்டாய், நான் மிகவும் சந்தோஷமடைகிறேன்.” என்றார்.
ஹெரிக்கல் செய்தது என்ன? முதல்முறையாக, அவர் தனக்குள் மையம் கொண்டிருந்தார். அவரது இலக்கும் இருந்தது, ஆனால் கூடவே அவரும் இருந்தார் – அவரும் ஆஜராகி இருந்தார்.
எனவே, நீங்கள் எதைச் செய்தாலும் – என்னவாக இருந்தாலும், அது வில்வித்தையாகத் தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை – நீங்கள் எதைச் செய்தாலும், வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்தாலும்கூட, அப்போது இருமுனை அம்பாக இருங்கள். வெளியில் என்ன நடக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் அதோடுகூட, உங்களுக்குள் இருப்பவர் யார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

விழிப்புணர்வுடன் இருங்கள்

நீங்கள் உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கின்ற எந்தத் தருணமும், அங்கே மையத்திலிருத்தல் ஏற்படுகிறது. ஆனால், அது ஏதாவது ஒரு சூழ்நிலையால் உருவானதாக இருக்குமென்றால், அதன்பின்னர் அந்தச் சூழ்நிலை முடிந்தவுடன் அது மறைந்து போய்விடும்.
அது, வெறுமனே ஏதோ ஒரு சூழ்நிலையால் உருவானதாக மட்டுமே இருக்கக் கூடாது. அது உங்களுக்குள் உள்ளதாக இருக்க வேண்டும். ஆகவே, ஒவ்வொரு சாதாரண காரியத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போதுகூட இதை முயற்சி செய்து பாருங்கள் – அப்போது அந்த உட்கார்ந்திருப்பவரைப் பற்றி விழிப்புடன் இருங்கள். நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியைப்பற்றி மட்டுமல்ல, உட்கார்ந்திருக்கும் அறையைப் பற்றி மட்டுமல்ல, சுற்றிலும் உள்ள வெளியைப் பற்றி மட்டுமல்ல, உட்கார்ந்து கொண்டிருக்கும் உங்களைப் பற்றியும் விழிப்புணர்வுடன் இருங்கள். உங்களது கண்களை மூடிக் கொண்டு உங்களை உணருங்கள்; உங்களுக்குள்ஆழமாகத் தோண்டி உங்களை உணர்ந்துபாருங்கள்.

Sunday, August 26, 2012

பஞ்சாட்சர தத்துவம்

திருமூலர் திருமந்திரத்தில் இதைப் பலவாறு விளக்குவார்! பஞ்சாட்சரமே மொத்தம் ஐந்து வகையாய் இருக்கு!
ஆமாம் மொத்தம் ஐந்து வகையான ஐந்தெழுத்து! இதோ.....
நமசிவாய = ஸ்தூல பஞ்சாட்சரம்
சிவாயநம = சூட்சும பஞ்சாட்சரம்
சிவாயசிவ = கரண பஞ்சாட்சரம்
சிவாய = மகா கரண பஞ்சாட்சரம்
சி = முக்தி பஞ்சாட்சரம்
எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும், ஆண் பெண் பேதமின்றி, சாதி மத பேதமின்றி, தீட்டு/பூட்டு என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல், யார் வேண்டுமானாலும் துதி செய்யவல்லது இந்தத் திருவைந்தெழுத்து!
குளித்தோ, குளிக்காமலோ, உடுத்தியோ உடுத்தாமலோ, உண்டோ, உண்ணாமலோ எப்போது வேண்டுமானாலும் ஜபிக்க வல்ல மந்திரம் இது!
இதன் பெருமையைப் பலரும் போற்றி உள்ளனர். திருமூலர் சிவசிவ என்றுசிந்தித்து இருந்தால் தீவினை எல்லாம் தீரும் என்கிறார்.
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினைமாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே

சிவ தீட்சை

அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு திட்சைகளைப் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான்.இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்
ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக்
காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்
கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு
ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு
ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்
மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத
முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."
- அகத்தியர் -
"ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.
"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.
"சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு
செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம்
பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்
பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும்
துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு
துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று
முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி
மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."
- அகத்தியர் -
"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.
"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர்.
"பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு
பண்பாக யங் வங் றீங் றுந்தான்
துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி
தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்
அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு
அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்
குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும்
குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."
- அகத்தியர் -
"யங் வங் றீங்" என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.
"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
"தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்
சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம்
மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார்
வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்
நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு
நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்
ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து
அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."
- அகத்தியர் -
"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர்.
"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.

சிவ மந்திரங்கள்

சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.ஓம்நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும். ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.சிங் சிங் சிவாய ஓ எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷிசிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி
ோதிடம்
FM
சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
துங் நமசிவாய என்று உச்சரிக்க - வித்துவான் ஆகலாம்.
ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.
ஓம் சிங்சிவாய என்று நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.
ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.
ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள் விலகும்.
ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.
ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க- கவலைகள் வற்றும்
கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்
ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும்.
அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம்.
ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க - சப்த கன்னியர் தரிசனம்.
ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.
ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க- அரிய பேறுகள் கிடைக்கும்.
ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.
வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.
சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.
ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும் சிறக்கும். ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரியபூமிகள் கொடுக்கும்.
சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.
சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.
கலியுங் சிவாய என்று உச்சரிக்க - வெள்ளம் பெருக்கெடுக்கும்.
ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி. சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.
மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்.

சிவன்மந்திர உச்சாடணங்கள்

மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.
அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்தமந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில்தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். இனி மந்திரங்கள்....
தத்புருஷ மந்திரம்
இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.
"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.அகோர மந்திரம்
இதன் மூல மந்திரம் "நமசிவ",
"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்கஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவாய நம" என உச்சரிக்கவானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்
வாமதேவ மந்திரம்
"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.சத்யோசாத மந்திரங்கள்
"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்ஈசான மந்திரங்கள்
"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.நேரம் கிடைத்தால்/மனமிருந்தால் இவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
ஓம்நமசிவாய!
ஓம்நமசிவாய!

தூதுவளைக் கற்பம

தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில்கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.
காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.
தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டுவந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்நீங்கும்.
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.
தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்மார்புச்சளி, இருமல், முக்குற்றங்கள் நீங்கும். பாம்பின் விஷத்தைமுறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும்.
தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பதுநாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.
தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்புநோய் அணுகாது.
மேற்கண்ட கற்ப முறைப்படி தூதுவளையை உண்டு வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.
தூதுவளைக் கற்பம்
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

தூதுவளை

கற்பக மூலிகை - தூதுவளை
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.
காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை,திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்.
இந்த கற்பமானது உடம்பை கல்போல் ஆக்கும். கல்லினால் செதுக்கப்பட்ட சிலைஎப்படி பன்னெடுங் காலமாக அப்படியே உள்ளதோ அதுபோல் நரை, திரை, மூப்புபிணிகளை நீக்கினால் உடலும் கல்போல் ஆகும்.
சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர்.மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோஅல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பிணியில்லாபெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.
அதுபோல் இந்த கற்ப மருந்தை சாப்பிடும் காலத்தில் தூய்மையானமனதுடன்இருக்க வேண்டும். தெய்வ சிந்தனை வேண்டும். மனம் தூய்மையானால் கற்ப மருந்துசிறந்த பலனைத் தரும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக கற்ப மருந்தை நல்ல நாள்பார்த்து சாப்பிட வேண்டும். ஆரம்பத்தில் சிறியதாக உட் கொள்ளும் மருந்தைநாட் செல்லச் செல்ல அதிகரிக்க வேண்டும். ஒரு மண்டலம்அதாவது 48 நாட்கள்சாப்பிட வேண்டும்.
இக்காலங்களில் புளியை நீக்குவதுநல்லது. மேலும் அகப் பத்தியம் என்றுஅழைக்கப்படும் ஆண் பெண் சேர்க்கையை தவிர்க்க வேண்டும். மது, புகை, போதைப்பொருட்களை அறவே தொடக் கூடாது.
இப்படிப்பட்ட மூலிகைளின் மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்து வருகிறோம். கற்ப மூலிகைகளில் சிறந்ததான தூதுவளை, பற்றி தெரிந்து கொள்வோம்.
தூதுவளை
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.
தூதுவே ளையையுணத் தொக்கினிற் றொக்கிய
வேதையா நொயெலா மெய்யைவிட் டகலுமே
(தேரையர் காண்டம்)

45 கற்பக மூலிகை

*. “கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
*. கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
*. காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
*. 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
*. கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
*. 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
*. ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
*. ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா” (1)
*. “செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
*. 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
*. நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
*. நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
*. பரந்திராய் 22 கல்லுத்தா மரையினோடு
*. பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
*. 25 வெந்திராய் 26 வெண்புரசு 27வெள்ளைத் துத்தி
*. மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே” (2)
*. “மிடுக்கான குண்டலமாம் 29 பாலையோடு
*. 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
*. கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
*. 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
*. கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
*. கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
*. படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
*. 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே” (3)
*. “தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
*. தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
*. 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
*. ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
*. பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
*. பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
*. துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
*. சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே.” (4)
*. “சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
*. சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
*. மத்தான மன்மதன்போல் தேகமாகும்
*. மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
*. எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
*. ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
*. அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
*. அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே .” (5 )
இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது மலைகளில் எளிதாகஏறலாம்.மூச்சு இரைக்காது. விண்வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்

பிராணாயாமம் 2

கபால ஜொலிப்பு :
இந்த பிராணாயாமம் செய்வதால் கபாலம் துடிக்கும். பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். வாயை மூடிக்கொள்ளவும்.கண்களை மூடிக்கொள்ளவும். பூரகம் ரச்சகத்தில் செய்யவும். இப்பயிற்சியில் கும்பகம் கிடையாது. ஆரம்பத்தில் ஒரு விநாடிக்கு ஒரு முறை பூரகம் ரச்சகம் செய்யவும். படிபடியாக உயர்த்திக்கொண்டு சென்று ஒரு விநாடிக்கு பத்து முறை வரை பூரகம்ரச்சகம் செய்யவும். வியர்த்துக் கொட்டும் வரை இப்பயிற்சி செய்யவும்.
பயன்கள் :
1. சுவாச குழாய் சுத்தமாகும்.
2. ஆஷ்துமா குணமாகும்.
3. காச நோய் வராது.
4. ரத்தம் சுத்தமடையும்.
உஜவி :
பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில்அமர்ந்து கொள்ளவும். வாயை மூடிக்கொள்ளவும். இரண்டு மூக்கு வழியாகவும் மூச்சை இழுத்துக் கொள்ளவும். முடிந்த அளவு உள்ளே கும்பகம் செய்து வலது மூக்கை மூடிக்கொண்டு இடது மூக்கு வழியாக காற்றை வெளியே விடவும். மூச்சை உள்ளே இழுக்கும் போது மார்பை விரிக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும் போது ஒரே சீராக இழுக்கவும்.
சீக்காரி :
பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில்அமர்ந்துக் கொள்ளவும். நாக்கை மேலே மடித்துக் கொள்ளவும். வாயை திறந்து ஷ்ஷ் சத்தம் போட்டுக்கொண்டு மூச்சை வாய் வழியாக இழுக்கவும். முடிந்த வரை அதிகநேரம் கும்பகம் செய்து இரண்டு மூக்கு வழியாக ரச்சகம் செய்யவும்.
பயன்கள் :
1. தாகம் குறையும்.
2. சோம்பல் குறையும்.
3. தூக்கம் போய்விடும்.
சீத்தாளி :
பத்மாசனம் அல்லது சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்துக்கொள்ளவும். அதன் பிறகு நாக்கை வாய் வெளியே நீட்டிக் கொள்ளவும். அதன்பிறகு காற்றை நாக்கு வழியாக உள்ளே இழுத்து முடிந்த வரை கும்பகம் செய்து பின்பு ரச்சகம் செய்யவும்.
பயன்கள் :
1. கட்டி, மஞ்சள் காமாலை, தோல்வியாதிகள் நீங்கும்.
2. தாகம் குறையும்.
3. கோபம் குறையும்.
பஷ்திரிகா :
பஷ்திரிகா என்பது கபாலமும், உஜவியும் சேர்ந்து செய்வதாகும். கும்பக முறையில் செய்யாமல் 5 லிருந்து 10 முறை வேகமாக மூச்சை வேகமாக இழுத்து வெளிவிடவும். பின்னர் உஜவி முறையில் காற்றை இழுத்து முடிந்த அளவு கும்பகம் செய்து பின்னர் ரச்சகம் செய்யவும். கோடை காலங்களில் ஒரு முறை செய்யவும். குளிர் காலங்களில் இரண்டு முறை செய்யவும். முதலில் 5 விநாடிக்கு கும்பகம் செய்து பின்னர் படிப்படியாக நான்கு நிமிடம் வரை கும்பக நேரத்தை கூட்டவும்.
பயன்கள் :
குளிர்க்காலங்களில் போர்வை இல்லாமல் இப்பயிற்சி மூலம் உடம்பை சூடாக்கிக் கொள்ளலாம்.
வண்டு பிராணாயாமம் :
வஜ்ராசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும். மூச்சை வேகமாக இழுக்கவும். பின்னர் தொண்டையிலிருந்து குறட்டை விடும்போது வெளிவரும் சத்தம் போல், வண்டு சத்தம் போடுவது போல் மூச்சைமெதுவாக வெளியே விடவும்.
பிராணாயாமம் செய்யும் போது மனதை ஒருமுக படுத்தி செய்தால் அதிக பலன் கிடைக்கும்

பிராணாயாமம்

அனுலோம் ,விலோம் :
இடதுமூக்கை மூடிவிட்டு வலதுமூக்கால் மூச்சை மெதுவாக ஒரே சீராக மூச்சை உள்ளே இழுக்கவும். பிறகு இரண்டுபக்க மூக்கையும் மூடிக்கொள்ளவும். முடிந்த அளவு மூச்சை உள்ளே வைத்துக்கொண்டு வலதுபக்கம் வழியாக வெளிவிடவும். அடுத்து வலது மூக்கை மூடி இடது மூக்கால் மூச்சை இழுக்கவும். பின்னர் கும்பகம் செய்து வலது மூக்கால் வெளிவிடவும். இவ்வாறு மூக்கை மாற்றி மாற்றி பயிற்சி செய்யவும். முதலில் சிறிதுக் காலத்திற்கு 5 முறை செய்ய வேண்டும். பிறகு இருபது முதல் முப்பது முறை செய்யலாம். முதலில் 1 விநாடி பூரகம் செய்து 2 விநாடி கும்பகம் செய்து பின்னர் 2 விநாடி ரச்சகம் செய்யவும். பிறகு சிறிது சிறிதாகக் கூட்டிக் கொண்டு சென்று 5:20:10 என்ற கணக்கிற்கு பண்ணலாம்.இதில் இன்னொரு முறையும் உண்டு. வெளிகும்பக முறையில் 5:10:20 என்ற கணக்கிற்கு பண்ணலாம். வெளிக்கும்பக முறை அதிகபலனை தரும். இப்படி செய்வதினால்
1. நுரையீரலில் உள்ள நோய்கள் குறையும்.
2. இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
எடுத்துக்காட்டுகள்
உள்கும்பக முறை :
1:2:2 ஆரம்ப நிலை 1 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
5:10:10
இரண்டுமாதம் கழித்து 5 விநாடிகள்மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
5:20:10 5 விநாடிகள் மூச்சை உள்ளேஇழுத்துக் கொள்ளவும்.
20 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
வெளிகும்பக முறை :
1:2:2 1 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும்.
5:10:10 5 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும்.
5:10:20 5 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
20 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும்.

நாடிசுத்தி :

புதிதாக பிராணாயாமம் பயில்பவர்கள் ஒரு மாதத்திற்கு இதைச் செய்யலாம். வலது மூக்கை விரலால் மூடிவிட்டு இடதுபக்கம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். அப்புறம் இடதுமூக்கை விரலால் மூடிவிட்டு வலதுபக்கம் வழியாக மூச்சை வெளியே விடவும். அப்புறம் வலதுபக்கம் வழியாக உள்ளே இழுக்கவும். இடதுபக்கம் வழியாக வெளிவிட வேண்டும். இதைபோல் மாற்றிமாற்றி 5 நிமிடம் செய்யவும். நாடிசுத்தி கட்டாயமாக செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை.

பிராணாயாமம்

1. காலையில் 5 மணிக்கு செய்யவேண்டும். முடியாவிட்டால் மாலையில் அல்லது காலையில் செய்யலாம்.
2. சாப்பிட்டு 3 மணிநேரம் கழித்துசெய்யவேண்டும்.
3. பிராணாயாமம் செய்து முடிந்து அரைமணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
4. பிராணாயாமம் செய்து 10 நிமிடம்கழித்து சாப்பிட வேண்டும்.
5. சோர்வடையும் அளவுக்கு பிராணாயாமம் செய்யக் கூடாது.
தகுதியான ஆசனம் :
பத்மாசனம், சித்தாசனத்தில் செய்வது நல்லது. அப்படி இல்லையெனில் சுகாசனத்தில் செய்துக் கொள்ளலாம்.
மூச்சு விடுதலில் நான்கு நிலைகள் உள்ளது.
பூரகம் :
மூச்சுக் காற்றை உள்ளே இழுத்தல்.
ரச்சகம் :
மூச்சை வெளியே விடுதல்.
உள்கும்பகம் :
மூச்சை உள்ளே நிறுத்தி வைத்தல்.
வெளிகும்பகம் :
மூச்சு காற்று உள்ளே இல்லாமல் வெளியே நிறுத்தி வைத்தல்.
மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் ஒரே சீராக செய்ய வேண்டும்.
பந்தம் :
மூலபந்தம் :
மனிதனின் மூலாதாரம் மலதுவாரத்திற்கும், பிறப்பு உறுப்பிற்கும் நடுவில் உள்ளது. சித்தாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தை குதிகாலால் அழுத்திக் கொள்ளவும். மலதுவாரத்தை குறுக்கி மலமிறக்கும் உணர்ச்சியை வயிற்றை நோக்கி இழுக்கவும்.
மூலபந்தத்தின் பயன்கள் :
1. இதை பண்ணுவதினால் தேவையில்லாத பசி குறையும்.
2. மலசிக்கல்களும், பிறப்பு உறுப்புகளுக்கும் சீராக வேலை செய்யும்.
3. இளமைக் குறையாது.
இது பிராணாயாமம் செய்யும் பொழுது செய்ய வேண்டும்.
ஜலந்தர்பந்தம் :
தொண்டையைக் குறுக்கி தலையை முன்னே சாய்த்து மார்பில் நாடியை அழுத்தமாக அழுத்தும் விதம் அமரவும். இது உள்கும்பகம் ஆரம்பிக்கும் போது செய்து ரச்சகம் செய்வதற்கு முன் நிறுத்தவும்.
ஒட்டியானபந்தம் :
வயிற்றைக் குறுக்கி வயிற்றைப் பின்நோக்கி இழுக்கவும். இது ரச்சகம் செய்ய ஆரம்பிக்கும் போது செய்து பூரகம் செய்வதற்கு முன் நிறுத்தவும்.

பிராணாயாமம் செய்ய தகுதியான இடங்கள்

1. காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும்.
2. தனிமையான இடமாக இருக்க வேண்டும்.
3. ஏ.சி அறையில் பண்ணக்கூடாது.
4. காற்றுப் பலமாக அடிக்கும் இடங்களில் செய்யக் கூடாது.
5. கொசுவர்த்தி சுருள், திரவம், கட்டி பயன்படுத்தக்கூடாது. கொசுக்களை கொல்வதை போல் மனிதனையும் கொன்று விடும். ஆகவே கொசுவலை பயன்படுத்தி பாதுகாக்கவும்.

பிராணாயாமம்

மந்திரம் :
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
பொருள் :
பறவையை விட வேகமாக செல்ல கூடிய குதிரை போன்ற மூச்சை அடக்கினால் போதை பொருட்களை குடிக்கத் தேவையில்லை. நாம் சுறுசுறுப்பாக துள்ளி நடக்கலாம். சோம்பல் ஏற்படாது. உண்மையை சொல்கிறேன் சூடு, சொரணை இருந்தால் கேட்டுக் கொள்.
மந்திரம் :
புறப்பட்டுப் புக்குத் திரிகின்றவாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.
பொருள் :
இஷ்டபடி வெளியில் வருகின்ற மூச்சுக் காற்றை முறைப்படி பிராணாயாமம் பயிற்சி மூலம் மூச்சை முறைப்படித்தினால் உறுப்புகள் புத்துணர்வு பெற்றுச்சிவக்கும். தலைமுடிக் கறுப்பாகும். பிராணாயாமம் பயிற்சி செய்யும் வரை உடம்பிலிருந்து உயிர் பிரிந்து செல்லாது.
மந்திரம் :
தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலம் தன்வழி நூறே.
பொருள் :
இடப்பக்கமும், வலப்பக்கமும் மூச்சு பயிற்சி மாற்றி மாற்றி பயிற்சி செய்து தலைவராகலாம் என்று அறிந்தவர்கள் யாரும் இல்லை.மூச்சுப் பெயர்ச்சி செய்து ஒளி வடிவில் கடவுளைக் காணலாம். மூச்சுப்பெயர்ச்சி செய்து ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தலாம். ஆகவே இதன் மூலம் நூறு வயது வரை நோய் நொடியின்றி இளமையுடன் வாழலாம் என்று திருமூலர்க் கூறியுள்ளார்

கடுக்காய்

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.
துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால் வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடு கிறோம்.கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவை யான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.'
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள்.

திரிபலா.

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்.

திருமூலர்

"மூல நாடி முகட்டறை உச்சியில்
நலுவாசல் நடுவுள் இருப்பீர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வாசல் கனவிலும் இல்லையே."
- திருமூலர் -
மூல நாடி என்றால் சுழுமுனை. இது எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்கும் தலயாயது. இதன் முகட்டில் உள்ள அறை கபால உச்சியில் இருக்கும். அங்கே நான்கு அறிவுகளின் வாசல்கள் உண்டு. அவற்றின் நடுவாக அமைந்த மையத்தில் மனம் ஒன்றி நிக்குமாயின் சச்சிதானந்தப் பெருவேளியைக்க் காணலாம். அதைக் கண்ட பின்பு இயமன் என்கின்ற பயம்இல்லவே இல்லை, அதாவது இறப்பே இல்லை என்கிறார் திருமூலர்.
நான்கு அறிவுகள் :- கண்ணறிவு, காதறிவு, மூக்கறிவு, நாக்கறிவு

அனுமந்தன் வசியக் கட்டு

“பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு
பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து
ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று
குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று
சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா
லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்
சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும்
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி
குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ
முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா
கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும்
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை ”
அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள், யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனிமந்திரத்தைக் கேள்,
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா ஓடிவா உக்கிரமாக ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"
திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.

Saturday, August 25, 2012

சகலத்திர்கும் கட்டு மந்திரம்.

ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம

மாந்திரிகத்தின் எட்டு நிலை

வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.
மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.
தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.
உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.
ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.
பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.
வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.
மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.

நத்தைச் சூரி

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
தாரணிக்குள் சாபமில்லை பெரியோர்கொள்வார்
சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு
செகமெல்லாம் இதன் பெருமை திறமோ காணார்
சுத்தியென்ற சூரிதனைத் தினமுங் கொண்டால்
சொல்லவொண்ணா ஆச்சரியம் இறுகுந்தேகம்
சுத்தியென்ற அருக்கனிலே காப்புகட்டிச்
சொல்லடா மந்திரத்தைச் சூட்டுறேனே.
சூட்டுகிறேன் ஓம்வச்சிர ரூபிசூரி
சூரி மகாவீரி சுவாகா வென்று
நாட்டுகிறேன் சமூலமே பிடுங்கிவந்து
நன்றாகச் சூரணம்செய் சீனிநேரே
ஊட்டுகிறேன் கலந்துமண் டலந்தாந்தின்னு
ஒரு நூறு இருபதுமோ வொருநாளும்
மாட்டுகிறேன் பத்திரத்தை வாயிலிட்டு
மைந்தனே மலைகளெல்லாம் நோருக்கலாமே.
நொறுக்கலாம் விரையெடுத்துத் தினமும் கொண்டால்
நூறூழி அளவுவரை இருக்கலாகும்
நோருக்கலாம் எந்தெந்தத் தொழில்கள்தானும்
நோக்காதே மற்றுமொரு கற்பமேனும்
நொறுக்கலாஞ் சத்துருவும் வியாதிதானும்
நுணுக்கமே உலகத்தோர் காணாரப்பா
நொறுக்கலாம் இம்மூலி சிரசில் வைக்க
நோக்காதே தேவதைகள் போற்றும்பாரே.
உலகத்தில் மூலிகை எல்லாவற்றிற்கும் சாபம் உண்டு ஆனால் "நத்தைச் சூரி" என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை.அதனை அறிந்தவர்கள் இந்த மூலிகையை அப்படியே பயன்படுத்துவார்கள் என்கிறார் மேலும் உலகத்தில் இதன் பெருமை அதிகம் என்றும் சொல்கிறார்.
நத்தைச் சூரியைத் தினமும் உட்கொண்டால் உடல் இறுகுமாம். ஞாயிற்றுக்கிழமையில் நத்தைச் சூரியை பிடுங்க வேண்டுமாம் அப்படி பிடுங்கும் போது "ஓம் வச்சிர ரூபி சூரி சூரி மகாவீரி சுவாகா" என்று மந்திரத்தைச் செபித்துச் பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாகச் சூரணம் செய்து அதற்கு சமன் அளவாக சீனி சேர்த்து ஒரு மண்டலம் உண்டால் அதிக வலிமை உண்டாகும் என்கிறார்.நத்தைச் சூரி இலையை வாயில் மென்று அதக்கிக் கொண்டால் மலையை நொறுக்கும் வலிமை உண்டாகுமாம்.
நத்தைச் சூரி விதையை எடுத்துத் தினமும் சாப்பிட்டு வர நீண்ட நெடுங்காலம் வாழலாம் என்கிறார். அத்துடன் அனைத்துச் சித்துக்களும் உண்டாகுமாம். வேறு எந்த கற்ப மருந்துகள் தேவைப்படாது,வியாதிகளும், எதிரிகளும் நெருங்காது வாழலாம் என்கிறார்.இவ்வாறான நுணுக்கமான தகவல்களை உலக மக்கள் அறிய மாட்டார்கள்.

மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்கள்

பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில்உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.

பூசை அறை

மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது. யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணிபுகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது.

மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது

மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. அகோர மந்திரங்கள் முறைப்படி வழிபாடு செய்யாவிட்டால் நமக்கு எதிர்விளைவுகளைக் கொடுத்து விட வாய்ப்புள்ளது. மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல்எடுத்த செயல் வெற்றிகரமாக முடியஅருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும். முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்குமலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனைசெய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள கை விரல்களின் கணுக்களை கொண்டு கணிக்கலாம் அல்லது உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும்.
மந்திரங்களை ஒரு குருவின் மூலமாக உபதேசம் பெற்று ஜெபிப்பதே சிறப்பு. தகுந்த குருவினால் மட்டுமே மேலே சொல்லப்பட்ட சகல விடயங்களிலும் சரியான வழியினைக் காட்ட முடியும்.

தவறான மந்திரம்

ரிஷி அனுஸ்டானம் இல்லாத மந்திரம் ஆயுளைக் கெடுக்கும். தவறான உச்சரிப்பு, தவறான ஒலி வியாதியைக் கொடுக்கும். தேவாதீனமான மந்திரங்கள் செல்வத்தை அழிக்கும். ஆயுதம், வஸ்திரமின்றி செய்யப்படும் மந்திரங்கள் புத்திர, பந்துக்ளைநாசம் செய்யும். முறைப்படி தெரிந்து முறைப்படி ஜெபிக்கப்படும் மந்திரங்களே சகல நன்மைகளையும் இம்மைக்கும், மறுமைக்கும் தரும்.

பஞ்சாட்சர மந்திரம்

பஞ்சாட்சர மந்திரம் என்பது பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தும்மந்திரமாகும். ஒவ்வொரு பூதத்திற்கும் எழுத்து, வரிவடிவம் உள்ளது. அதாவது ந – ம –சி – வ – ய என்ற எழுத்துகளாகவும்,வட்டம், ஐங்கோணம், அறுகோணம், சதுரம், முக்கோணம் போன்ற வரிவடிவங்களாயும் உள்ளன. இவை அவற்றிற்குரிய உலோகங்களில் அவற்றிற்குரிய இடத்தினைப் பெறும் போது பஞ்சாட்சர யந்திரம்ஆகிறது உலோகங்கள் பண்டைய கால கருத்துப்படி இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம், வங்கம், துறா, வெண்கலம், ஈயம், நாகம் என்ற 9 உம் ஆகும். இந்த உலோகங்களில் தகடுகள் செய்து அவற்றில் மந்திரஉயிர் எழுத்துக்களை, வடிவங்களை அவற்றிறகுரிய இடங்களில் எழுத வேண்டும. குறிக்கப்பட்ட மந்திரங்களிற்கு குறிப்பிட்ட உலோக தகட்டினயே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதியுள்ளது. இப்படி செய்தால்தான் மந்திரம் சரியான முறையில் வேலை செய்யும்.
மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெறமுடியும்.

மனதை செம்மைப்படுத்த மந்திரம்

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்) மனதை செம்மைப்படுத்த மந்திரம் அவசியம் என்பதனை அகத்தியர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

சாந்த மந்திரங்கள்

ஒரு செயலை நினைத்து அந்த செயலிற்குரிய மந்திரத்தை முறைப்படி குரு முகமாக தீட்சை பெற்று முறைப்படி ஜெபித்து வந்தால் அந்த காரியம் நினைத்தபடி சித்தியாகும். மந்திரம் என்பது ….. அதன் செய்முறைதான் மாந்திரீகமாகும். தேவதைகளிற்குரிய மந்திரங்களை குரு முகமாக தீட்சை பெற்று அதற்குரிய நியமத்துடன் ஜெபித்து வந்தால் அந்த தேவதைகள்நேரில் பிரத்தியட்சமாகி மந்திர ஜெபம் செய்பவரிற்கு சகல சித்திகளையும் அருளும். மந்திரங்கள் ஏழு கோடி எனக் கூறுவர். அவை பீஜம், பிரணவம், கீலகம், ரஷ~p என பல வகைப்படும். மகா மந்திரங்களை மந்திரமுணர்ந்த குருவிடமிருந்து தீட்சை மூலமாகவே தெரிந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றுள் முக்கியமான சாந்த மந்திரங்கள் பஞ்சாட்சரி, தூல பஞ்சாட்சரி, சடாட்சரி, ஏகாட்சரி, பஞ்ச பிரம்மம், மாலா, சூடாமணி, சிந்தாமணி, திரிபுரசுந்தரி, அன்னபூரணி, மிருத்யுஞ்சு ஜெயம், தட்சிணாமூர்த்தி, கணேசர், விஷ்ணு, ருத்திரன் போன்றன. மந்திரங்களை மந்திர நிகண்டு, கொங்கணவர் நடு படைக் காண்டம், திருமந்திரம், அகத்தியர் மாந்திரீக காவியம் மற்றும் பல சித்தர்களின் நூல்களில் தெளிவாக காணலாம்.

யந்திரங்களின் வலிமை

மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெறமுடியும். சக்தி எற்றப்பட்ட யந்திரங்களின் வலிமையினால் சகல செயல்களையும் செய்ய முடியும். அப்படிப்பட்ட செயல்களில் நல்லவை, கெட்டவை இரண்டுமேயுண்டு. சொல்லப்போனால் மந்திரம் என்பது ஒரு வகை சக்தியாகும். நெருப்பு என்ற சக்தி எப்படி தீபமாக இருந்து ஒளியைக் கொடுத்து நமக்கு நல்ல செயல்களைச் செய்கிறதோ அதோ போல் மந்திரங்களும் நல்லவற்றை செய்ய வல்லன. அதே நெருப்பு ஒரு வீட்டினை கொளுத்தும் போது எப்படி தீய செயலை செய்கிறதோ மந்திரங்களும் அதே போல் தீய செயல்களையும் செய்ய வல்லன.
நெருப்பினைக் கொண்டு தீபத்தினைஏற்றுவதா அல்லது வீட்டினைக் கொளுத்துவதா என்பதினை தீர்மானிப்பது நெருப்பு அல்ல மனிதர்களாகிய நாம் தான். அதே போலத் தான் மந்திரங்களையும் நல்ல காரியத்திற்கு நாம் பயன்படுத்தினால் அது நன்மையையும் தீய காரியத்திற்கு பயன்படுத்தினால் அது தீமையையும் தர வல்லது.
மாந்திரீக சக்தி மூலம் நாம் 1. வசியம் 2. மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம் 6. வித்வேசணம்7. உச்சாடனம் 8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். அஸ்டகர்மத்தில் உள்ள ஒவ்வொரு செயலிற்கும் மந்திரங்கள், பூசை முறைகள், அமரும் இருக்கை, பூசைக்குரிய மலர்கள், ஜெபத்திற்குரிய மலர்கள், ஜெபத்திற்குரிய மணிகள்(மாலைகள்), யந்திரம் அமைப்பதற்குரிய தகட்டின் உலோகம் போன்றன தனித்தனியே அமையும்.
யந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது குறிப்பிட்ட காலம்வரைதான் நிலைத்திருக்கும். இந்த கால அளவானது அதில் பதிவாகியுள்ள உச்சாடனத்தின் அளவு, உருக் கொடுத்த முறை, உருக் கொடுத்த மாந்திரீகனின் மன ஒருமைப்பாடு, யந்திரம் எழுதிய உலோகத் தகட்டின் அளவு, சித்தியான பின்பு அதனை வணங்கும் முறையைப் பொறுத்து அமையும்.

மந்திரம்

மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன ஆகும். சில மந்திரங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும், சில துஸ்ட மிருகங்களை அடக்கவும், சில பகையை வெல்லவும் பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை மானிடர்களின் நலனைக் கருதியே வெளிப்படையாக வெளியிட்டனர். ஆனால் பிற்காலத்தில் மனிதன் தனது சுய லாபத்திற்காக மனிதர்களைக் கொல்லுவும். அவர்களை சீரழிக்கவும் அதனை பிரயோகிக்க கற்றுக் கொண்டான். இதனாலேயே மாந்திரிகம் என்றாலே மக்கள் மத்தியில் ஒருவித பயமும், அதன் மீது ஒரு வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.
மந்திரம் என்பது ஒருவகை சக்தியாகும். ஒலி வடிவிலானது. ஒலியலைகளைக் கொண்டு செயலாற்றும் தன்மையுடையது. மனதில் நினைத்ததை நினைத்தபடியே செயலாற்ற வைக்கும் சக்தி கொண்டது. அந்த சக்தியை எத்தகைய செயலையும் செய்து சாதிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதனைக் கொண்டு சாதிக்க முடியாதுமிக மிக அரிது என்றே சொல்லலாம்.
மனித எண்ணத்தினது சக்தி மற்ற எல்லா சக்திகளையும் விட வலிமையானது வேகமும் அதிகமானது என்று தற்கால விஞ்ஞானம் ஒப்புக்கொண்டுள்ளது. ஒலியைவிட விரைவானதும் சக்தி வாய்ந்ததும் சிந்தனா சக்தி எனப்படும் மனோசக்தி ஆகும். இந்த சக்தியை எளிதில் தோற்றுவிக்க உதவுதே மந்திரங்களாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிவது, எண்ணங்களை ஈடேறச் செய்வது, ஹிப்னோடிசம், மெஸ்மரிசம் செய்வது போன்ற அனைத்திற்கும் மூலமே மந்திரங்களும் அவற்றின் சக்தியுமேயாகும். இந்த மந்திரங்களை பயன் படுத்தும் கருவியாக யந்திரங்கள் செயல்படுகின்றன. இந்த வழிமுறைகள் தொன்று தொட்டு நமது தேசத்தில் பயன்பட்டு வந்துள்து.மந்திர சாஸ்திரத்தை முறைப்படி அறிந்தவர் மிகச்சிலரே. இந்த சாத்திரம் அறிவியலானது. இதனை தவறான வழியில் பயன் படுத்தாமலும், தீய செயல்களிற்குபிரயோகப்படுத்தமலும் இருப்பதற்காகவே இதனை முழுமையாக யாரும் அடுத்தவரிற்கு கற்றுத் தருவதில்லை.
மந்திர சாத்திரத்தினை ஒரு மந்திர சாத்திரம் முழுமையாக கற்றறிந்த குருவிடத்தே கற்றுக் கொள்ள முடியும். குருவில்லாமல் கற்றுக் கொள்ளும் எதுவும் சிறப்பினைத் தராது. மந்திர சாத்திரத்திற்கு முக்கியமானது எழுத்துக்களும் அவற்றிற்கான ஒலி அலைகளுமே ஆகும். இப்படி எழுத்துக்களை கொண்டு செயலாற்றும் மந்திரங்களை “வர்ணாத்ம சப்தம்” என வழங்குவர். வெறும் ஒலியலைகளை மட்டும் கொண்டும் மந்திரங்களை செயலாற்றச் செய்ய முடியும். இந்த வகை மந்திரங்களை “துவனியாத்ம சப்தம்” என வழங்குவர்.
பஞ்ச பூதங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஆகாயத்திலிருந்தே மற்றய நான்கு பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று தோன்றியதாக கருதப்படுகிறது. மந்திர ஒலியானது பஞ்ச பூதங்களிலும் பாயக் கூடியது. நாம் எழுப்பும் மந்திர ஒலியானதுகாற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றய பூதங்களையும் தாக்கிசெயல்படுகிறது. மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள் உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும். மந்திரங்களில் பயன் படும் ஒவ்வோர் எழுத்திற்கும். ஒலிக்கும் வலிமையும், அந்த ஒலிக்கேற்ற அதிரும் வலிமையும் கொண்டவை.
பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள்தனது அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்; அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால் தானாகவேஇந்த பொருள் அதிரும் என்று நிருபிக்கப்பட்டுள்து. அந்த தத்துவமே மந்திரங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது நமது அண்டம் (ஆகாயம்) பலதரப்பட்ட சக்திகளால் நிறைந்தது என்பது விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்த அண்டத்திலிருக்கும் சக்திகளானது நாம் மந்திரங்களை உரிய அதிர்வுடன் ஜெபிக்கும் போது பாதிக்கப்படுகின்றன. நாம் ஜெபிக்கும் மந்திரத்தின் அதிர்விற்கு சமனான அதிர்வு கொண்ட சக்தி பாதிக்கப்பட்டு என்ன நோக்கத்திற்கு நாம் மந்திரம் ஜெபிக்கிறோமோ அந்த செயலைச் செய்கிறது.
மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்த முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெறமுடியும்.

பஞ்சாட்சரி

ியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...
அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே
பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீவளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபிசுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம்அதாவது 96 நாட்கள் செய்து வர 300வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்

அன்பு

அன்பு என்பது எப்போதும் மிக ஆழமானது,மலரும் தன்மையுடையது.அது முழுமையில் கலக்கும் அற்புதக்கலை. யாரும்,யாருக்காகவும் இல்லை.உள்ளுக்குள் தனி விருப்பு வெறுப்புகள் உண்டு,மற்றவர்க்கும் அதே.
தனிமையை நாம் விரும்புவதில்லை,அதில் வெறுப்பும் விரக்தியும் உணர்கிறீர்கள்.ஆனால் தனியாக loneliness சுற்றித்திரிவது தனிமையாகாது aloneness .அது பிரக்ஞை நிலையில் உச்சத்தன்மையில் இருப்பதாகும்.அந்த நிலையில் பரவும் அன்பு கொண்டாட்டமானது உங்கள் அனபை,உங்கள் பாட்டை,உங்கள் இசையை,உங்கள் ஆட்லை மற்றும் இந்த அழகிய மரங்களை,வெகுளி நிறைந்த அந்த பறவைகளின் ஒலியை,இரவில் தெரியும் நட்சத்திரங்களை இப்படிஎல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக கொண்டாடுங்கள் பிறரோடு உண்மையாகப் பங்கிடுவது எதுவென்றால்,உங்கள் ஆழ்ந்த அமைதி,ஆனந்தம் மற்றும் கொண்டாட்டம்தான்.அப்பொழுது உங்கள் இதயம் மெல்ல மெல்ல உருகி,மற்றவர்களோடு ஒன்று கலக்கும் .அப்பொழுது உங்கள்
அன்பு ஆத்மிகமாக மாறுகிறது
- ஓஷோ

ஜென் கதை9

அ ரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள்தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம்.
ஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரை விட்டு, மற்றொரு நகரை நோக்கி நடந்தார்.
மாலை நேரமாகிவிட்டது. மழை வேறு. ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. முற்றாக நனைந்துவிட்ட குரு, விவசாய பண்ணைக்கு நடுவில் இருந்த ஒரு வீட்டை அணுகினார். வீட்டுக்கு வெளியே நிறைய ஷூக்கள், நனையாமல் இருந்தன.
சரி, ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்… நனையாத உடை, ஒரு ஜோடி ஷூ வாங்கி அணிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தார்.
உள்ளேயிருந்து வந்த ஒரு பெண்மணி, குருவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை தந்தார். அவர் உடை நனைந்திருப்பதைப் பார்த்து, வேறு உடை மாற்றிக் கொள்ளுமாறும், இரவை அங்கேயே கழிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
வீட்டு முகப்பில் ஒரு சிறு கோயில். அங்கு சிறிது நேரம் கண்மூடி நின்ற குருவுக்கு,
பின்னர் உள்ளே இருந்த தனது அம்மா மற்றும் குழந்தைகளை அந்தப் பெண்மணி அறிமுகப்படுத்தினார்.
ஆனால் அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டத்தை அவர் கண்டார். ஏதோசரியில்லை என்பது புரிந்ததும், “என்ன அம்மா உங்கள் பிரச்சினை?”என்று கேட்டார்.
“அய்யா… என் கணவர் ஒரு சூதாடி, குடிகாரர்.. எப்போதெல்லாம் சூதாட்டத்தில் ஜெயிக்கிறாரோ, அப்போது இருக்கும் பணத்தையெல்லாம் குடித்துவிடுவார். தோற்கும்போது, வீட்டிலிருப்பதை எடுத்துப்போய் விடுவார். அல்லதுகடன் மேல் கடன் வாங்குகிறார். சமயத்தில் குடித்துவிட்டு எங்கேயோ விழுந்துகிடந்து பின் வருகிறார்… என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்றார்.
கவலை வேண்டாம்… நான் உதவுகிறேன்… இதோ என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது. நல்ல ஒயினையும், சாப்பிட உணவும் வாங்கி வாருங்கள். அதன் பிறகு நீங்கள் படுக்கப் போங்கள்… நான் அந்தக் கோயிலில் சற்று நேரம் தியானம் செய்கிறேன்”, என்று அந்தப் பெண்ணிடம் பணம் கொடுத்து அனுப்பினார்.
சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்துவிட்டான். மித மிஞ்சிய போதையில் இருந்தான். கால்கள் தரையில் நிற்கவில்லை…
“ஏய்… இங்க வாடி… நான் வந்துட்டேன்டி… என்ன பண்ற.. சாப்பாடு கொண்டா” என்று சத்தமாகக் கேட்டான்.
உடனே அவனிடம் வந்த குரு, “இதோ நான் தருகிறேன், நீ கேட்டதை,” என்றார்.
பின்னர், “மழையில் மாட்டிக் கொண்டேன். உன் மனைவிதான் இங்கு தங்க அன்போடு அனுமதித்தார். அதற்கு பிரதியுபகாரமாக நல்ல ஒயினும் சாப்பிட மீனும் கொண்டு வந்துள்ளேன்,” என்றார் குரு.
குடிகார கணவனுக்கு ஒரே சந்தோஷம். மொத்த ஒயினையும் குடித்தான். சாப்பிட்டான். அப்படியே தரையில் சரிந்து விழுந்து தூங்கிவிட்டான்.
குருவோ, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
விடிந்தது.
கணவன் எழுந்து பார்த்தான். முந்தைய இரவு நடந்தது எதுவும் அவனுக்கு நினைவிலில்லை.
குருவைப் பார்த்தான். “யார் நீ.. எங்கிருந்து வருகிறாய்? என் வீட்டில் என்ன வேலை?” என்று கேள்விகளை வீசினான்.
புன்னகை மாறாத முகத்துடன் அவனதுகேள்விகளை எதிர்கொண்ட குரு, “நான் இந்த நாட்டு மன்னனின் குரு. பக்கத்து நகருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்,” என்றார்.
ராஜகுரு என்றதும், அந்த குடிகார கணவன் திடுக்கிட்டான். தான் நடந்து கொண்டதை நினைத்து வெட்கமடைந்தான். தனது செயல் மற்றும் பேச்சுக்காக மன்னிப்பு கோரினான்.
குருவின் முகத்தில் புன்னகை மாறவில்லை. “வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. வாழ்க்கை குறுகியது. அந்த குறுகிய காலத்தில், குடி, சூதாட்டம் என இருந்தால், உடனிருக்கும் நல்ல உறவுகளை இழந்துவிடுவாய்.. குடும்பமே இல்லாமல் போய்விடும் என்பது தெரியவில்லையா?”, என்றார்.
ஏதோ ஒரு ஆழ்ந்த கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல திடுக்கிட்டு எழுந்தான் குடிகார கணவன்.
“ஆம்.. நீங்கள் சொல்வது சரிதான் குருவே…”, என்றவன், ” உங்களின் இந்த அற்புதமான அறிவுரைக்கு நான் என்ன திருப்பித் தரப் போகிறேன்,” என உருகினான்.
“கொஞ்ச தூரம் உங்களின் பொருள்களைத் தூக்கிக் கொண்டு உடன் வருகிறேன். ஒரு சிறிய சேவகம் செய்த திருப்தியாவது கிடைக்கும்,” என்றான் திருந்தியஅந்த குடிகாரன்.
“சரி… உன் விருப்பம்,” என்றார் குரு.
இருவரும் நடக்க ஆரம்பித்தனர். மூன்று மைல்கள் தாண்டியாயிற்று.அவனை திரும்பிப் போகச் சொன்னார்குரு. இன்னும் 5 மைல்கள் உடன் வருவதாய் அவன் தெரிவித்தான்.
ஐந்து மைல்கள் கடந்தது. ‘சரி.. நீ போகலாம்’ என்றார் குரு.
“இன்னும் ஒரு பத்து மைல்கள் வருகிறேனே…” என்று மன்றாடினான்.
பத்து மைல்கள் கடந்ததும், கொஞ்சம் கண்டிப்பான குரலில், “நீ இப்போது வீட்டுக்குத் திரும்பலாம்,” என்றார் குரு.
“குருவே, இனி நான் பழைய பாதைக்குதிரும்புவதாக இல்லை. மிச்சமிருக்கும் நாளெல்லாம் தங்கள் வழியைப் பின்பற்றி நடப்பேன்!,” என்றான் உறுதியான குரலில்…

ஜென் கதை8

ஒ ரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர்.
ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?’
‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு.
‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?’
‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!”
குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர்.
‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்,’ என்று முடிவு செய்தனர்.
மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர்.
சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர்.
குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர்.
எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு!
குழப்பம் குருவே குழப்பம்!
பு கழ்பெற்ற துறவி அவர்.
அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.
பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்,’ என்று ஆரம்பித்தார் மாணவர்.
‘என்ன?’
‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!’
‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?’
‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்துவிடுகிறது!”
குருநாதர் சிரித்தார். ‘ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?’
‘ஆமாம் குருவே. அது தவறில்லையா?’
‘இல்லை. நீ தினமும் தியானம் செய்,தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!’
‘அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?’
‘அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும் இல்லையா?!”
-

ஜென் கதை7

ஜ ப்பானில் ஒரு புகழ்பெற்ற ஜென் குரு அவர். அவருக்கு சுவோ என்று ஒரு சீடர். அவர் நல்ல ஆசிரியரும்கூட.
ஒரு கோடையில், ஜப்பானின் தென் தீவிலிருந்து ஒரு மாணவன் வந்தான், தத்துவம் பயில.
அவனை சுவோவிடம் அனுப்பினார் தலைமை குரு. மாணவனுக்கு முதல் பரீட்சை வைத்தார் சுவோ.
“உனக்கு ஒரு கை ஓசை கேட்கிறதா?” – இதுதான் அந்த சோதனை.
அவனுக்குக் கேட்கவில்லை. அந்த சோதனையில் தேர்ந்தால்தான் சுவோவிடம் பயிற்சி பெற முடியும். எனவே ஒரு கை ஓசையைக் கேட்க அவன் காத்திருந்தான்…. வாரக் கணக்கில் அல்ல… மாதக் கணக்கில் அல்ல.. ஆண்டுக் கணக்கில். ஆண்டுகள் மூன்று முழுசாய் ஓடின!
ஒரு இரவில், சுவோவிடம் வந்தான் மாணவன்.
“என்னால் உங்கள் சோதனையில் தேர்ச்சி பெற முடியவில்லை. அவமானம், தர்மசங்கடத்தைச் சுமந்தபடி என் தீவுக்குச் செல்கிறேன்…” என்றான்.
“தம்பி.. அவசரப்படாதே.. இன்னும் ஒரு வாரம் எடுத்துக் கொள். நன்றாக தியானம் செய்..” என்றார் சுவோ.
ஒரு வாரம் கழிந்தது. மாணவனுக்கு ஒரு கை ஓசை கேட்கவே இல்லை. மீண்டும் சுவோவிடம் வந்தான். அவர் “இன்னும் ஒரு வாரம் முயற்சி பண்ணுப்பா” என்றார். ஆனால் அவன் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை.
மேலும் ஒரு வாரம் கெடு கொடுத்தார் சுவோ. அப்போதும் விடை கிடைக்கவில்லை மாணவனுக்கு.
மிகுந்த ஏமாற்றமும் சோர்வுமாக வந்த மாணவன், ‘போதும் குருவே, நான் போகிறேன்’, என்றான்.
சரி, ஒரு ஐந்து நாள் மட்டும் இருந்து பார்த்துவிட்டுப் போ என்றார் சுவோ. அந்த ஐந்து நாட்களில் அவனால் எதையும் உணர முடியவில்லை. மீண்டும் சுவோவிடம் வந்து உதட்டைப் பிதுக்கினான்.
இந்த முறை சுவோ இப்படிச் சொன்னார்:
“சரி, கடைசியாக மூன்று தினங்கள்.இந்த மூன்று தினங்களில் உன்னால்இந்த சோதனைக்கான விடையைக் காண முடியாவிட்டால், செத்துப் போ,” என்றார் கண்டிப்பு மிக்க குரலில்.
மாணவன் தன் அறைக்குத் திரும்பினான். இரண்டாம் நாள் வந்தான்.. “குருவே.. ஒரு கை ஓசை கேட்டது… நான் தேடி வந்தது கிடைத்தது,” என்றான.

ஜென் கதை6

ஓர் ஊரின் வெளிப்புறப் பகுதியில் ஜென் துறவி ஒருவர் தன் குடிலில் இருந்தபடி பொதுமக்களுக்கு நல்லன சொல்லி வந்தாராம். அவருடைய குடிலில் வேலை பார்த்த ஒரு பெண் திடீரென்று கர்ப்பமாகி விட்டாளாம். அவளுடைய அப்பா கோபமாகி அவளை அடித்து “உன்னுடையகர்ப்பத்துக்கு யார் காரணம்?” என்று கேட்க, அவள் அந்த ஜென் துறவி தான் காரணம் என்று கைகாட்டினாளாம்.
ஊரே திரண்டு “அடப்பாவி! நீ இவ்வளவு கேவலமானவனா? போலி சாமியாரே! இப்படி நீ செய்யலாமா?” என்று காறி உமிழ அவர் சாதாரணமாக “அப்படியா?” என்றாராம்.
ஊரே அவரை ஒதுக்கி விட்டதாம். புதிதாக ஊருக்கு வருபவர்கள் அந்தத் துறவியைப் பார்க்க வரும்போது, “என்னய்யா, உங்களைப் பற்றிஊரில் இப்படி எல்லாம் பேசுகிறார்களே” என்று கேட்பார்களாம். அவர், சாதாரணமாக “அப்படியா?” என்பாராம்.
அந்த வேலைக்காரிக்கு தான் சொன்னபச்சைப் பொய் உறுத்திக் கொண்டே தூங்க ஒட்டாமல் செய்ததாம். ஒருநாள் ரகசியமாக துறவியைச் சந்தித்து சந்தர்ப்பவசத்தால் தான் பொய் சொல்ல நேர்ந்ததைச் சொல்லி அழுதாளாம். அந்தத் துறவி,“அப்படியா?” என்பதற்கு மேல் ஒருவார்த்தை பேசவில்லையாம்.
நாட்கள் நகர அந்த வேலைக்காரிக்குக் குழந்தை பிறந்ததாம். குழந்தை அவளுடைய அத்தைமகன் ஜாடையில் இருக்க, ஊராருக்கு உண்மை தெரிந்ததாம். அடடா, அந்த நல்லவரை அப்படிப் பேசி விட்டோமே என்று வருந்தி அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். அவர் அதற்கும் “அப்படியா?” என்றாராம் சாதாரணமாக.
பலசமயங்களில் சத்தியம் என்பது முட்டைக்குள் இருக்கும் கரு போன்றது. அதனைப் பொறுமையுடன் அடை காத்தால் அன்றி அதற்கு உயிர் கொடுக்க முடியாது. நம் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஆதாரம் தேவை இல்லை; நம்பிக்கை இழந்தவர்களிடம் காட்டப்படும் ஆதாரம் மட்டும் எப்படி நம்பகமாகக் கருதப்படும்? பேசுபவரின் குரல் எவ்வளவுக்கு உயருகிறதோ அவ்வளவுக்கு கேட்பவருக்கு நம்பகத் தன்மை குறையும் என்பது பொது நீதி.

ஜென் கதை5

அமைதியாக அமர்ந்திருந்த துறவியிடம் அரசன் கேட்டான்.
''இறந்தபின் நமது புனிதமான ஆத்மாஎன்ன ஆகும்?''
''அதை ஏன் என்னிடம் கேட்கிறாய் ''
''நீங்கள் முக்காலமும் உணர்ந்த துறவியாயிற்றே''
''உண்மைதான்.. ஆனால் நான் இன்னும்சாகவில்லையே'' என்றார் துறவி புன்னகையோடு.
அருமையான ஜென் கதை ஒன்று…
புத்தரின் தலைமை மடாலயத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவம். அடிப்படை சந்நியாஸப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சந்நியாஸிகள், தியானத்தை மக்களுக்குக் கற்றுத்தந்து, மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக நாடு முழுவதும் சேவைக்காக புறப்படும் நேரம் வந்தது. அதில் பூர்ணகாஷ்யபா எனும் சந்நியாஸிக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை.
பூர்ணகாஷ்யபா நேரடியாய் புத்தரிடமே சென்று கேட்டார், “”நான் எங்கு செல்லட்டும்?”
புத்தர் சிரித்தபடி சொன்னார், “”நீயே தேர்வு செய்யப்பா.” இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார். சீடனைப்பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் புத்தர் கேட்டார், “”அந்தப் பகுதிக்கா? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும்முரடர்கள். சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் அடிதடி சண்டையில் இறங்குபவர்கள், கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள். இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்?”
“ஆமாம்” என்று தைரியத்தோடு சொன்ன சீடனிடம் புத்தர் சொன்னார்…
“உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்.”
“ம்…”
“முதல் கேள்வி, அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில்அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?”
“ரொம்ப ஆனந்தப்படுவேன். ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை; உதைக்கவில்லை.
திட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்களே; மிகவும் நல்லவர்கள்… என்று நன்றி சொல்வேன்.”
“இரண்டாவது கேள்வி. ஒருவேளை திட்டாமல் அடித்து உதைத்தால் என்ன செய்வாய்?”
“அவர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என ஆனந்தப்படுவேன்.”
“மூன்றாவது கேள்வி. ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்?”
“ஆஹா இன்னும் ஆனந்தப்படுவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று மிகவும் ஆனந்தப்படுவேன்” என்று சொன்னதும்,
“நன்றாக தேறிவிட்டாய். அங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் நீ வாழ்ந்து விடுவாய். எதனாலும் இனி உன்னை வீழ்த்தமுடியாது. எப்போதும் ஆனந்தமாயிருக்க பக்குவப்பட்டுவிட்டாய். எங்கு சென்றாலும் நல்லாயிருப்பாயப்பா. போய் வா” என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.
எந்தச் சூழலையும் ஆனந்தமாக அணுகக் கற்றுக் கொண்டால், எந்த சூழலையும் ஆனந்தமயமாக்கிட முடியும். இல்லாவிட்டால் ஆனந்தமயமான சூழல்கள் வாய்த்தால்கூட, அதிலும் ஏதாவது துக்கம் இருந்து கொண்டே இருக்கும்.