Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Friday, September 14, 2012

ஜென் கதை -மிச்சம் உள்ளது எது?


சியோனொ என்ற பெண் துறவி. புக்கொ என்ற ஜென் மாஸ்டரிடம் கல்வி கற்றுவந்தார்.
ஏனோ, பல வருடங்களாகப் படித்தும், பயிற்சி எடுத்தும்கூட சியோனொவுக்கு ஞானம் கிடைக்கவில்லை. இதில் அவருக்கு மிகவும் வருத்தம்.
ஒரு பௌர்ணமி ராத்திரி. சியோனொ ஆற்றில் தண்ணீர் பிடித்துக்கொண்டு ஆசிரமத்தை நோக்கி நடந்தார்.
சியோனொ தூக்கி வந்த குடம் மிகப் பழையது. பாதி வழியில் அது கீழே விழுந்து உடைந்துவிட்டது. தண்ணீர் தரையெங்கும் சிந்தி வீணாவதைப் பார்த்த சியோனொவுக்கு, ஞானம் பிறந்தது. ஒரு கவிதை எழுதினார்:

நான் என்னால் முடிந்தவரை இந்தக் குடத்தைக் காப்பாற்றப் பார்த்தேன்,
முடியவில்லை, உடைந்துவிட்டது,
இப்போது இந்தக் குடத்தில் துளி தண்ணீரும் மிச்சமில்லை,
இப்போது இந்தத் தண்ணீரில் துளி நிலாவும் மிச்சமில்லை!’

No comments:

Post a Comment