Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Monday, September 10, 2012

பஞ்சாட்சரம்


பஞ்சாட்சரம் இருவகைப்படும். அவை தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம். ‘காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும்நம சிவாயஎன்பதுதூல பஞ்சாட்சரம்.’ அதைப் போன்றுசிகாரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும்சிவாய நமஎன்பதுசூட்சும பஞ்சாட்சரம்எனப்படும். தூல பஞ்சாட்சரம்மானநம சிவாயஎன்பது பொதுவாக இகபரஇன்பங்களை வேண்டி வழிபடுபவர்களுக்கு பொருத்தமானது. இதுசிவனுக்கு வணக்கம்எனப் பொருள்படும்
சரியை நெறியில் நிற்போர் தூல பஞ்சாட்சரத்தையும் கிரியை யோக நெறியில் நிற்போர் சூட்சும பஞ்சாட்சரமானசிவாய நமஎன்பதையும் ஞானநிலையில் நிற்போர். முத்தி பஞ்சாட்சரமானகாரம்காரம் ஆகிய இரண்டும் நீக்கியசிவாயஎன்ற மூன்று அட்சரங்களைக் கொண்டமுத்தி பஞ்சாட்சரம்’; உட்சரிப்பதற்கு உகந்தது. அதாவது நிருவான திக்கை பெற்றவர்கள்.
பஞ்சாட்சரத்தை உச்சாடணம் செய்யும் போது மூன்று முறையாக பின்பற்றுவர் அவை மானதம், மந்தம், உரை என்பனவாகும். இதில் வெளியில் ஒலி எழுப்பாது மனத்தினுள் தியானித்தலைக் குறிக்கும் இது உத்தம மாகும் இதனைமானதம்என்பர். தானது காதுகளுக்கு மட்டும் கேட்கக் கூடியதாக உச்சரித்தல்மந்தம்எனப்படும். பிறர் கேட்க்கக் கூடியதாக சத்தமாக உச்சரித்தல்உரைஎனப்படும். ‘மானதமகோடி மடங்கு பலனும், ‘மந்தம்பத்தாயிரம் மடங்கு பலனும். ‘உரையில் நூறு மடங்கு பலனும் கிடைக்கும் என ஸ்மிருதிகள் கூறுகின்றன்.
திருவைந்தெழுத்தின் பொருமையை திருமந்திரம் குறிக்கையில்
அஞ்ந்தெழத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்ந்தெழத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்ந்தெழத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்ந்தெழத் தாலே மெர்ந்துநின் றானே
குறிப்பிடுகின்றார். திருவைந்தெழுத்தின்காரத்தினால் உலக படைக்கப்பட்டது. ‘காரத்தால் உடலும் உயிரும் இணைந்து விளங்குகின்றது. யோனியான உயிர் நகர அடையாளத்தால் விரிந்த உலகத்தை இயைந்து யாக்கிக் காக்கும் நடுநிலைமை விளங்கும்சிகாரம்கார அடையாளங்களால் எல்லாமாய் அமர்ந்தமை விளங்கும் என குறிப்பிட்டுள்ளார். அஞ்தெழுத்து உலகத்தை ஆக்க வல்லது என்பது புலணாகும்.
அஞ்செழுத்து பந்தத்திலிருந்து விடுலையளிக்கும் என்பதை
வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவர்ற்குச்
சார்ந்த வினைத்துயார் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே
திருவருட் துணையால் திருவைந்தெழுத்தை முறையாக ஒதுவதனால் உலகியல் நுகர்வுடன் அதன் கண் தொடக்கின்றி வாழ்தலுமாகும். புpறவிப் பெருந்துயர் நீங்கத் தம் முதல் முருவுமாய் வந்தருலுவான். புரிகடையோன் என்னும் போது புரி 10 சடையோன் என்பது திருவாதிரை நாளை விரும்புபவன் என்றும் ஒன்றாய் வேறாய் உடனாய் விரும்பி உறையும் பண்பினேன். என்பது பொருள்.
திருவைந்தெழுத்தால் எல்லாவுலகமும் ஒழுங்காக நடைபெறுகின்றது. என்பதை
ஐந்தின் பெருமையே அகலிட மாவது
ஐந்தின் பெருமையே ஆலய மாவது
ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனு மாமே
திருவைந் தெழுத்தின் சிறந்த திருக்குறிப்பே திருக்கோயிலாகும். அதில்சிகாரம்; சிவலிங்கமாகும். ‘காரம் அடுத்த மண்டபமாகிய மனோன்மணி நிலை. ஆனேற்று நிலைகாரம். அம்பலவாணர் நிலைகாரம். பலிபீடம்காரம் அவ்வாறு பெருமை பெற்றது திருவைந் தெழுத்து.
ஓர்எழுத்தான ஓமிலிருந்து பஞ்சபூதங்களானான் ஐந்தெழுத்தில் என்பதை திருமந்திரம்
வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரேழுத் தாயநில ந்தங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாயுயி ராமெழுத்து
ஓரெழுத் தீசனும் ஒண்சுட ராமே விண்காரமாயும் நீர்காரமாயும் நிலம்காரமாயும் தீசிகாரமாயும் காற்றாகி உயிரெழுந்துகாரமாயும் உள்ளவன் சிவன்வமநசியஎன்பதில் அடங்கும்.
திருவைந்தெழுத்தல்காரமே உலகை உருவாக்கும் என்கின்றது திருமந்திரம்
நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே உலகம் அடங்கி அதன் ஆணைப்படி நடக்கும்நமசிவாயஎன ஓதுவார்க்கு நன்நெறி செல்லும் வெல்வர்களாவர்.
அகாரம் உயிரே உகாரம் பரமெ
முகாரம் மலமாய் வருமுப் பதத்திற்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென் றறையலு மாமே
உயிரெனக் குறிக்கும் உடல் மெய் இருபத்திநான்கும் அகாரமாகும். புரமென குறித்து உணர்ந்து மெய் ஐந்தும் உகாரம் மாகும். முலமெனக் கூறிய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும். இம் முப்பத்தாறும் மெய்களுள் சிகாரம் கிவமாய் உயிருக்குயிராய் வகாரம் சிவனின் திருமேனியாய் யகாரம் திருவருளாகும். ஏனக் குறிப்பிட்டுள்ளார்.
நகார மகார சிகார நடுவாய்
வகாரம இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதற்கொண்டு டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்கத் தானே
நமசிவாய என்பதில் சிகாரம் நடு இரண்டு வளி என்பது இடபால் வலபால் மூச்சு என உயிர் அடையாளமான யகாரத்தைக் குறிக்கின்றது. ஓம் எனும் மந்திரத்துடன் சேர்த்து நமசிவாய மந்திரத்தை ஓம் நமசிவாய என ஓத சிவப்பரம் பொருள் நெஞ்சகத்தே கோயில் கொள்வான் என்கின்றது திருமந்திரம்.
சிவபெருமானின் மந்திரவுருவை கூறுகையில்
சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுமஞ்
சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே
சிவயஎன்பதுடன் முதலாகசிவஎன்பதைச் சேர்த்துசிவயசிவஎன்பதே சிவபெருமானின் மந்திரவுருவாகும்.

No comments:

Post a Comment