Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Friday, September 14, 2012

பிராணாயாமத்தில் சுவாச பந்தனத்தின் பலன்


பிராணாயாமத்தில் முதலில் மன அமைதியுடன் பத்மாசனத்தில் அமர்ந்து பழக வேண்டும். ஆணிற்கு வலது பக்கமும் பெண்ணிற்கு இடது பக்கமும் ஆளுமை உடைய பக்கங்களாகும். முதலில் இரு நாசியிலும் மூச்சை இழுத்து விடல் வேண்டும். நான்கு அல்லது ஐந்து முறை செய்து இதயத் துடிப்பைச் சமநிலைக்கு கொண்டு வருதல் வேண்டும். பின் பிரணாயாமத்தை தொடங்க வேண்டும். சூரிய நாடியாகிய பிங்கலையில் பிராணனை இழுத்து மெல்ல நிரப்பி, விதிப்படி பந்த பூர்வமாகிய கும்பகம் செய்து மறுபடியும் சந்திர நாடியாகிய இடைகலையில் ரேசிக்கவேண்டும். பின்னர் சந்திர நாடியாகிய இடைகளில் பிராணனை பூரித்துக் கும்பிக்கபட்ட பிராணனை பிங்கலையில் ரேசிக்கவேண்டும். சூரிய சந்திர கலைகளில் பிராண வாயு செல்லுங்கால் பிரிதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் நன்கு தத்துவங்களும் வந்து விலகும். இவை அனைத்தும் ஆகாய தத்துவத்தில் சென்று அமரும். அந்த நேரத்தில் சுவாசம் குறைந்து வரும். இதை சுவாச பந்தனம் என்பர். சுவாச பந்தனத்தின் போது
1.      ஒரு அங்குலம் குறைந்தால் யோகியானவன் இவ்வுலகத்தினின்று சுவாதீன படுவான்.
2.      இரண்டு அங்குலம் குறைந்தால் - மனம் ஆனந்திக்கபட்டு ஞான செல்வம் உண்டாகும்.
3.      மூன்று அங்குலம் குறைந்தால் தூர தேசத்தில் நடக்கும் நடவடிக்கைகள் அவனுக்கு புலனாகும்.
4.      நான்கு அங்குலம் குறைந்தால் விவேகியாவான்.
5.      அயிந்து அங்குலம் குறைந்தால் முதுமையை வெல்வான்.
6.      ஆறு அங்குலம் குறைந்தால் ஆகாயத்திலுள்ள சகலமும் கண்டுணர்வான்.
7.      எழங்குலம் குறைந்தால் அவன் சரீரம் காய சித்தி பெறுவான்.
8.      எட்டங்குலம் குறைந்தால் அணிமாதி சித்திகளை அடைவான்.
9.      ஒன்பது அங்குலம் குறைந்தால் நவ கண்டங்களில் சஞ்சரிப்பான்.
10.  பத்து அங்குலம் குறைந்தால் ஒரு தேகத்தை விட்டு மற்றொரு தேகத்தில் பிரவேசிப்பான்.
11.  பதினோரு அங்குலம் குறைந்தால் தனது ஆன்மாவை கண்டு உணர்வான்.
12.  பன்னிரண்டு அங்குலம் அடங்கும் சுவாசமானது உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டு இருக்கிறபடியால் யோகியானவன் நெடும்காலம் அன்ன பானாதிகளை நீக்கி அசைவற்றிருப்பன். 
இந்த யோகத்தின் போது முதல் தீக்ஷையில் ரோம த்வாரங்கள் வழியாக கெட்ட நீர் வியர்வையாய் வழியும்
இரண்டாவதில் வாத, பித்த, சிலேத்தும தோஷங்கள் நீங்கும்.
மூன்றாவதில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும்
நான்காவதில், சர்ப்பம் தோலுரிப்பதுபோல் சரீரத்தில் தோல் உரியும். aint சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகப் பஞ்சமூர்த்திகள் கோரியதை தருவார்கள்.

ஆறாவதில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து, தூர திருஷ்டி தெரியும்.
ஏழாவதில், எட்டவதில் சட்டை வெறுப்பாய் கழன்று தீபம் போல பிரகாசிக்கும், வச்யமாகும்

ஒன்பதாவதில் தேகம் சூரிய பிரகாசமாய் அஷ்டமா சித்தியும் கைவல்யமாய் தேவர்கள் ஏவல் புரிவர்
பத்தாவதில் தேகம் தீபம் போல பிரகாசிக்கும்
பதிநோன்றாவதில் தேகத்தை வெட்ட கத்தி ஓடும்
பன்னிரெண்டாவதில் சொருஒப சித்தி, அண்டத்தில் மௌனம், நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஏற்படாது!.சுடரான சுழுமுனையில் சந்திரன் சேரில் பஞ்ச பூதமும் அறிவும் ஒடுங்கும். சூரியன் சேரில் ஐம்பூபுலனும் அறிவும் ஒடுங்கும். சூரியன் சந்திரன் ஒன்றாய் கூடி சுழு முனையில் ஒடுங்கில் அறிவும் தச வாயுவும் ஒடுங்கும்.இந்த வாயுவை நடுநிலையிலும், மூலத்திலும், நாபியிலும், கண்டத்திலும், சுழியிடமும் சதா நிற்கப் பெற்றவர்களே மெய் ஞானியர்!இந்த பிரணாயாமத்தை அருணோதயம் முதல் மூன்று நாழிகை வரையிலும், மத்தியானத்திலும், அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னுமாக இரு முகூர்த்தமும், அர்த்த ராத்திரியிலும் பிரதி தினம் நான்கு முறை செய்ய வேண்டும்.
திருமந்திரத்தில் இந்த பிராணாயாம சுற்றை, 16 வினாடி இழுத்து, 64 வினாடி இருத்தி, 32 வினாடி விடுதல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.தச வாயுக்களில் ஒன்றான "பிராணன்" என்ற வாயுவை (உயிர் காற்றை) வெளியில்விடாதவாறு கட்டுபடுத்துவதே பிராணாயாமம்!

No comments:

Post a Comment