Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Saturday, August 25, 2012

ஜென் தத்துவங்கள்

ஒரு ஜென் துறவியிடம் சீடன்ஒருவன் ஜென் தத்துவங்கள் கற்று வந்தான். அவனுக்கு கற்பனைகள் அதிகம்.
அநேகமாக இன்று கற்றுக் கொடுத்த தியானத்தை செய்தால், நமது குருவின் திறமையில் பாதி கிடைத்துவிடும். அட! அது வேண்டாம். இதைவிட முக்கியமான ஒருதியானம் இருக்கிறதே. அதைச் செய்தால், நிறைய பலன் கிடைக்குமே?
அளவு கடந்த கற்பனையில் இருந்த சீடன், வழியில் நின்றபடி, தியானம் செய்ய ஆரம்பித்தான். நான் புத்தராக மாறுகிறேன். மாறிக்கொண்டே இருக்கிறேன்..! அப்போது அந்த வழியில் வந்த துறவிக்கு, தனது சீடனின் செய்கை வியப்பை அளித்தது. சீடன் நீண்ட நேரம் கழித்து கண்விழித்தான். தன் அருகே குரு காத்திருப்பதைக் கண்டு வியந்தான்.
குருவே! தங்களை வணங்குகிறேன். ஆமாம் வழியில் ஏன்தியானம் செய்து கொண்டிருக்கிறாய்?
குருவே! எனக்கு புத்தராக மாற வேண்டுமென்று ஆசை. அதனால் தான் க்டுமையாக தியானம் செய்தேன். உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்குமே!
ஜென் துறவி எதுவும் பேசவில்லை. கீழே கிடந்த கல்லை எடுத்து தூக்கி போட்டு பிடிக்க ஆரம்பித்தார்.
ஆமாம் என்ன செய்கிறீர்கள்?
இந்த கல்லை தூக்கிப் போட்டு வைரமாக் மாற்றப் போகிறேன்.
இதென்ன விந்தையாக் இருக்கிறது? எவ்வளவு முறை கல்லை தூக்கிப் போட்டு பிடித்தாலும், அது வைரமாக மாறாதே?
நீண்ட நேரம் தியானம் செய்பவன், புத்த்ராக மாறும் போது, இந்த கல் வைரமாக மாறாதா?
சீடனுக்கு அதிர்ச்சியாகஇருந்தது. தனது தவறும் அவனுக்கு புரியத் தொடங்கியது.
தியானம் என்பது கடுமையான உழைப்பல்ல. ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து செய்வது தான் தியானம்.
உண்மையை உணர்ந்து கொண்டேன் மகானே!

No comments:

Post a Comment