Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Friday, June 16, 2017

அம்பிகை தியானம்


மந்திரம்
ஹரிஓம் திரிபுரபாலை வா வா நசி மசி உம் அம் ஐயும் கிலீயும் சௌவும் சிவ ஓம்  ஐம்  ஹ்ரிம் ஸ்ரீம்

Friday, June 9, 2017

சித்தர்கள் இனம் மொழி சைவம் சார்ந்த நூல்கள்


சிவன் சித்தர் முகநூல் கீழ் இயங்கும் கட்செவி (WhatsApp) அணிகளில் இதுவரை பகிரப்பட்ட பழைய நூல்களை ஒன்றாக தொகுத்து Google drive ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது,  நமது பழைய நூல்கள் அழியாமல் பாதுகாக்கவும்,
அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும் இந்த இணைப்பை மற்றும் நூல்களின் பட்டியல்.pdf பகிரப்படுகிறது, எனவே இந்த இணைப்பை அவரவர் WhatsApp குழுக்களிலும்,நண்பர்களிடமும்,முகநூல்களிலும் என அனைவருக்கும் பகிருங்கள்.
நமது பழமையை காப்போம்,
நமது பாரம்பரியம் அறிவோம்,
இந்தப் பட்டியலில் பதிப்புரிமை உள்ள நூல்கள் இருந்தால் தெரிவியுங்கள். அவற்றை அகற்றி விடுகிறோம். அன்பே சிவம்
நன்றி   https://www.facebook.com/sivan.siththar

மலையாள மாந்திரிக போதனம்

Friday, October 7, 2016

ஸ்ரீமுனீஸ்வரர்.சிவனாரின் அம்சமே ஸ்ரீமுனீஸ்வரர். முதலில் அறுவடை செய்கையில்..புதிய பொருட்கள் வாங்குகையில் முதலில் அவருக்கு வைத்து படைத்திடுக. முக்கிய வேலைக்கு செல்கையில்.. இரவு நேர காப்புக்கு.. தீவினை சக்தியிலிருந்து விடுபட.. பிரயாணத்தின் போது ஜபித்திட.. பய உணர்வு அகன்றிட..தன்னம்பிக்கை பெருகிட..உகந்த துதி இதுவே.
தாடிக் கொண்டையுடனே தளர்விலா தெய்வ வடிவுற்று
ஓடிப்போன பொருளெல்லாம் கூடியே வரவழைத்து வாடிய பயிரையும்
வளரச் செய்யும் முனிஸ்வரனே போற்றி! போற்றி!போற்றி!
ஓம் சிவார்ப்பணம் முடிந்த வரை ஆயிரம் பேரை ஜபிக்க வைக்கவும்.ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் மற்றவர் படிக்க வரைந்திடுக!
முனீஸ்வரர் காயத்ரி மந்திரம்
ஓம் கானக வாசாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத்

ஓம் பராக்ரமாய வித்மஹே
முனிஸ்ரேஷ்டாய தீமஹி
தந்நோ முனி ப்ரசோதயாத்.

முனீசுவரர் எனும் பெயர் முனிவர்களுக்கெல்லாம் ஈசுவரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் எனக் குறிப்பிடும். முனீசுவரன் இந்துக்களின் கிராமியத் தெய்வங்களின் வரிசையில் வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாகும். தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் முனீசுவரர் வழிபாடு சிறப்படைந்து காணப்படுகின்றது. கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர். முனி என்ற சொல் ரிக் வேதத்தில் தெய்வ ஆவேசம் படைத்தவர்என்றம், பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகின்றது. உபநிடதம், பகவத்கீதை என்பவற்றில் உலக வாழ்க்கையை வெறுத்து ஞான வரம்பாகிய மௌனத்தைக் கடைப்பிடித்து பரமதியானத்தில் ஆழ்ந்து தட்பவெப்ப, சுகதுக்கம் தாக்கப்படாமல் விருப்பு வெறுப்பு, கோபதாபம் முதலியவை அறவே நீக்கியவர்கள் என்றும் கூறப்படுகின்றது..கிராம மக்கள் மத்தியில் தவறு செய்தால் தலையில் அடிப்பவர், நம்மோடு ஒரு மனிதராகவே வருவார், வானுக்கும் பூமிக்குமாக ஒளிப்பிளம்பாக காட்சி தருபவர் என்று பலவாறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

Tuesday, September 13, 2016

வாய் கட்டு மந்திரம்

ஓம் அம் உம் சிங் சிவயநம   (மூல மந்திரம் ஒரு லட்சம்)
ஓம் நாவடங்க நமசிவய
ஓம் நமனடங்க நமசிவய
ஓம் ஊரடங்க நமசிவய
ஓம் உறவடங்க நமசிவய
ஓம் கோனடங்க நமசிவய
ஓம் குடியடங்க நமசிவய
அன்றாடம் உன் பாதம் பணியும் என்னிடம் யாவரும் அடங்க உன் தேவியுடன் வந்து அருள்செய்வாய் நமசிவய சுவாகா (108)

Monday, August 8, 2016

பாவங்களின் 42 வகை. வள்ளலார் பாவங்கள்

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
19. நட்டாற்றில் கை நழுவுவது.
20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.
31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
41. தந்தை தாய் மொழியைத் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்

சகல அட்சரகளின் பெருமை

 1. நங் நங் என்றால் நன்மைகள் உண்டாகும்
 2. அங் அங் என்றால் மண்டலத்தில் இடி விழாது
 3. வங் வங் என்றால் உலகமெல்லாம் வசியம்
 4. வசி வசி பீடைகள் நிவாரணம்
 5. மசி மசி சகல விஷங்கள் இறங்கும்
 6. அசி அசி என்றால் அநேகமாய் பெருகிவிடும்
 7. உசி உசி  யாவும் ஒழிந்துவிடும்
 8. மசி நசி நசி மசி பேய் பிசாசுகள் ஒழிந்துவிடும்
அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்
1) மோகன மந்திரம் : ஓம் ரீங் மோகய! மோகய!
2. சத்ருக்கள் வசியம்--ஓம் ரீங் வசி!வசி!
3. நோய்கள் தீர---    ஓம் ரீங் நசி நசி
4) துஷ்ட மிருகம் ஓட--ஓம் ரீங் அங்
5) இகபர சித்தி--         ஓம் ரீங் சிவயவசி
6) தம்பனம் –              ஓம் ரீங் ஸ்தம்பய! ஸ்தம்பய!
7) அகர்ஷனம் –     ஓம் ரீங் ஆகர்ஸ்ய !ஆகர்ஸ்ய !
8) உச்சாடனம் நோய் கள் தீர –  ஓம் ரீங் உச்சாடய! உச்சாடய!
9) செளபாக்கியம் பெற: ஓம் ரீங் சிவசிவ!
10) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!
12) சத்ரு சம்ஹாரா மந்திரம்- ஓம் ரீங் மசி நசி நசி மசி
13) நெற்றிகண் மந்திரம்- ஓம் லம் சூஷ்மூநாயா நமக
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்   மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு நன்று   

ஓம் சிவசிவ ஒம் •   ஜாதி மத இனப் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.
 •  ஒரே தகுதி சைவ உணவு பழக்கமும்,எந்த உயிரையும் துன்புறுத்தாத ஜீவகாருண்ய உணர்வும் மட்டுமே இருந்தால் போதும்.இதற்கு தீட்சை பெற வேண்டியதில்லை;
 • ஓம் என்னும் அட்சரத்தில் ஆரம்பித்து ஓம் என்னும் அட்சரத்தில் முடிவதால், குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது.
 •   அவர்களுக்கு அருளும் பொருளும் ஒருங்கே கிடைக்கும்.
 •  எல்லா மந்திரங்களும் இதில் அடக்கம் என்பதால்,வேறு எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.
 •  முதலில் குலதெய்வத்தை வணங்கிக் கொள்ள வேண்டும்.(அது தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும்)
 •  பிறகு விநாயகரை வழிபட வேண்டும்.பிறகு தினமும் காலை 108 முறையும்,மாலை 108 முறையும் ஓம் சிவசிவ ஓம் என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே வரவேண்டும்.
 •   ஒரு சில நாட்களிலேயே நமது நீண்ட காலப் பிரச்னைகள்,நோய்கள் தீர ஆரம்பிக்கும்.உடனே விட்டுவிடக்கூடாது.
 •  அமைதியான மனநிலையில் தான் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும்.நம்பிக்கைதான் முதலீடு.ஒரு அமாவாசையன்று இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
 •  21 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரலாம்;
 • பவுர்ணமி,அமாவாசை,சிவராத்திரி, தமிழ் மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் இந்த மந்திரத்தை ஜபிக்க பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.
 • எந்த மலையில் இருந்தாலும்,எந்த கடலில் இருந்தாலும்,எந்த வனத்தில் இருந்தாலும் இந்த மந்திரம் உங்களைக் காப்பாற்றும்.சூட்சுமமாக இயங்கும் சிவ கணங்கள் வந்து உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும்.
 • திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபித்துக்கொண்டு சென்றால்,அடுத்த சில நாட்களில் கர்மப்பிரச்னைகள் திடீரெனத் தீரும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.
 • பொதுவாக நடக்கும்போது எந்த மந்திரத்தையும் ஜபிக்கக்கூடாது என்பது விதி;மீறி மந்திர ஜபம் செய்தால், விபத்து ஏற்படும்;வாகனங்கள் ஓட்டும்போதும் இதேபோல் மந்திரஜபம் ஜபிப்பது கூடாது.ஆனால்,திருவண்ணாமலை கிரிவலத்தின் போது நமது வழிபாடே கிரிவலமாக இருப்பதால்,அப்போது மட்டும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கலாம்.
 • பதவி உயர்வு,பதவி வேண்டுவோர் ஞாயிறு இதை நோன்புடன் ஜெபிக்க வேண்டும்.
 • நல்ல வாழ்க்கைத்துணை வேண்டுவோர் திங்கள் கிழமை நோன்புடன் இதை ஜபிக்க வேண்டும்.
 •  தீராத நோய்கள் தீர செவ்வாய்க்கிழமையன்று நோன்பு இருந்து ஜபிக்கவேண்டும்.
 •  கல்வி,வித்தைகளில் நல்ல தேர்ச்சியடைய புதன் கிழமைகளில் நோன்புடன் ஜபித்துவரவேண்டும்.
 • ஆத்மஞானம் பெற வேண்டின் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்று ஜபிக்க வேண்டும்.
 • பண நெருக்கடி நீங்கவும்,செல்வ வளம் பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
 • கண்திருஷ்டி,செய்வினைக் கோளாறு,மனக்கோளாறு நீங்கிட சனிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
 • விபூதி,ருத்திராட்சம் போன்ற அருட்சாதனங்களை அணிந்து எந்த மந்திரம் ஜபித்தாலும் உடலில் மின் அருட்சக்தி கூடிவிடும்.
 • சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் அல்லது மாத சிவராத்திரியன்று அல்லது மாதப் பிரதோஷம் அல்லது சனிப்பிரதோஷம் அன்று திருவண்ணாமலைக்கு வந்து,உடலெங்கும் விபூதி பூசி,கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து,வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு,விரதமிருந்து(சாப்பிடாமல்) கிரிவலம் செல்ல வேண்டும்.அப்படி கிரிவலம் செல்லும் 14 கி.மீ.தூரம் முழுக்க (சுமார் 6 மணி நேரம்) ஓம் சிவசிவஓம் என ஜபித்து வந்தாலே,ஒரு முறை இப்படிச் செய்தாலே,நமது ஊழ்வினை தீர்ந்துவிடும்.நாத்திகர்கள் கூட இதை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கட்டும்;
 • மேல்நாட்டு இண்டாலஜிஸ்டுகளும் இதை பரீட்சித்துப் பார்க்கலாம்;ஆன்மீக அன்பர்களும் இதை சக்திவாய்ந்த வழிபாடாக,ஒரு தவமாக செய்து மனநிம்மதியும் செல்வச் செழிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் பெறமுடியும்.இந்தத் தகவல்களை வழங்கியவர்: அருட் திரு:டாக்டர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்

Tuesday, April 5, 2016

சண்ட பைரவ மந்திரம்

சண்ட பைரவ மந்திரம்

  மூல மந்த்ரம்
ஓம் ஹிரீம் சண்ட பைரவ சர்வ சத்ரு நசாய  ஸ்தாபய   ஸ்தாபய உச்சாடாய ஹூம்பட்  ஸ்வாஹா (உரு ஒரு இலச்சம்)

கபால பைரவர் மந்திரம்
குரூர பைரவர் மந்திரம்

                          அவை நின்று விடும்

அக்கினி தண்ணீர் வாயு இவைகளை கட்டலாம்
அஷ்டமா சித்திகள்     சித்தியாகும்
பிரமச்சர்யம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்


மஹா பைரவர் மந்திரம்Monday, April 4, 2016

காத்தாயினி அம்மன் மந்திரம் - திருமணம் விரைவில் நடக்க


அஷ்டமா சித்திகள் அருளும் பாலசுமுகிதேவி
மூல மந்த்ரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கிலீம் சௌவும் ஸ்ரீ பாலசுமுகிதேவி மம வசம் குரு குரு ஸ்வாகா
(உரு இலச்சம்)

பூஜா விதி
v  ஒரு பவுர்ணமி இரவு செப்பு தகட்டில் எந்திரம் வரைந்து பால், தேன்,பன்னிர் அபிசேகம் செய்து
v  மஞ்சள் பிள்ளையார் பிடித்து வடை, சுண்டல், அப்பம், தேங்காய், பழம், பத்தி, புஷ்பம், தூப தீபம் காட்டி 
v  கிழக்கு முகமாய் ஆசனத்தில் அமர்ந்து மூல மந்திரத்தை செவ்வரளி மலர்களால் 1008 உரு 21 நாள் செபிக்க சித்தியாகும்

v  பயன்கள்

v  சந்தனம், குங்குமம், புஷ்பம் இவைகளில் 1௦8 உரு கொடுத்து திலகமிட ராஜ வசியம் ஆகும்

v  யாருக்கு கொடுத்தாலும் அவர்கள் வசியம் ஆவார்கள்

v  ஒரு இலச்சம் ஜெபித்தால் தேவி தரிசனம் கிடைக்கும்

v  இரு இலச்சம் ஜெபித்தால் நினைத்த ரூபம் எடுக்கலாம்

 v  மூன்று இலச்சம் ஜெபித்தால் கந்தர்வனை போன்ற அழகு 
உண்டாகும்

v  நான்கு இலச்சம் ஜெபித்தால் சுமுகி தேவி இடம் இருந்து ஆயுதம் பெறலாம்

v  நமது சாரிரம் மாய சாரிரம் ஆகும்

v  அஷ்டமா சித்திகள் கிடைக்கும்

v  சுமுகி தேவியால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை